ரேஷன் பயனாளிகளுக்கு மொபைல் ஆப் அறிமுகம்

Selvasanshi 1 View
1 Min Read

மத்திய அரசு தற்போது ரேஷன் பயனாளிகளுக்காக புதிய மொபைல் ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த ஆப்பின் பெயர் ‘மேரா ரேஷன் ஆப் ‘என்பதாகும்.

தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் மற்றும் இதர நலத் திட்டங்களின் கீழ் ரேஷன்பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை தேசம் முழுவதும் வழங்குவதே ‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ திட்டத்தின் நோக்கமாகும்.

இந்தியாவில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் , புலம்பெயர் தொழிலாளர்கள் ரேஷன் பொருட்களை வாங்க ‘ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் ‘ உதவுகிறது.

தற்போது ‘மேரா ரேஷன் ஆப்’ ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் அறிமுகப்படுத்தி உள்ளார்கள். கூடிய விரைவில் 14 மொழிகளும் பல்வேறு வசதிகளுடன் அறிமுகப்படுத்த உள்ளார்கள்.

‘மேரா ரேஷன் ஆப்’பின் சிறப்பு அம்சங்கள்:

  • அருகில் உள்ள நியாய விலைக் கடை எங்கு இருக்கு என்பதை தெரிந்துகொள்ளலாம்
  • ரேஷன் கார்டுகளுக்கு உணவு தானியங்கள் எவ்வளவு பெற்றுக்கொள்ளலாம் என்பது பற்றிய தகவல்களை அறிந்துகொள்ளலாம்.
  • அண்மையில் வாங்கிய பொருட்கள் மற்றும் பரிவர்த்தனைகளை பற்றி தெரிந்துகொள்ளலாம்
  • ஆதார் இணைப்பு நிலவரம் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
  • புலம்பெயர் தொழிலாளர்கள் புலம்பெயரும்போது அதன் விவரங்களை ஆப்பில் பதிவு செய்துகொள்ளலாம்
Share This Article
Exit mobile version