சர்வதேச பயணிகள் விமானங்கள் இடைநிறுத்தம் ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு

1 Min Read
  • கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் காரணத்தால் சர்வதேச பயணிகள் விமானங்களை ஏப்ரல் 30ஆம் தேதி வரை இடைநிறுத்தம் செய்துவதாக மத்திய விமான போக்குவரத்து துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.
  • இதைப்பற்றி விமான போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது, கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை வீசல் காரணமாகச் சர்வதேச பயணிகள் விமானங்களை வரும் ஏப்ரல் 30ம் தேதி வரை இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
  • மேலும் இந்த விதிமுறை சர்வதேச சரக்கு விமானங்களுக்கும், விமான போக்குவரத்துக் கழகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட சரக்கு விமானங்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தாது.
  • அவசரக் காலத்தில் கொரோனா வைரஸ் பரவலைப் பொருத்து குறிப்பிட்ட வழித்தடங்களில் விமானங்களை இயக்க அனுமதிக்க கூடும்.
  • கொரோனா தொற்றுநோய் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 23-ம் தேதி முதல் சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்தை இந்தியா நிறுத்திவைத்திருந்தது.
  • அதன்பின்னர் வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்துவரக் கடந்த ஆண்டு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை குறிப்பிட்ட வழித்தடங்களில் சிறப்பு சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டது.
  • இதற்கான ஒப்பந்தத்தை அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட சுமார் 20 நாடுகளுடன் இந்தியா விமான போக்குவரத்துக் கழகம் உடன்படிக்கை செய்து இருந்தது.
  • தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் அதிகரித்து வரும் காரணத்தால் சர்வதேச பயணிகள் விமானங்களை இடைநிறுத்தி வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
Share This Article
Exit mobile version