ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதி போட்டிக்கு முன்னேறி வரலாற்று சாதனை

Pradeepa 3 Views
1 Min Read

ஒலிம்பிக்கில் வலுவான ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இந்திய மகளிர் ஹாக்கி அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. இந்த தொடரின் B-பிரிவில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலியா 5 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்று அசைக்க முடியாத அணியாக காலிறுதிக்கு முன்னேறியது. ஆனால் A-பிரிவில் இடம் பெற்றிருந்த இந்தியாவும் 4-ஆம் இடத்தைப் பிடித்து கால் இறுதியை எட்டியது.

டோக்கியோவில் இன்று காலை நடைபெற்ற விறுவிறுப்பானஆட்டத்தில் ஆஸ்திரேலியா 1 க்கு 0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து ராணி ராம்பால் தலைமையிலான இந்திய அணி முதல் கால் பகுதியில் இரு அணிகளும் கோல் போடவில்லை. இதனை தொடர்ந்து ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் கிடைத்த பேனலிட்டி கார்னர் வாய்ப்பை இந்திய மகளிர் அணி பயன்படுத்திக் கொண்டது. அந்த வாய்ப்பை விரயம் செய்யாமல் போலாக்கி ரசிகர்களையும் அதிர்ச்சி கடலில் மூழ்கடித்தார்.

உலக தரவரிசையில் 2வது இடம் வகிக்கும் ஆஸ்திரேலியாவுடன் ஒப்பிடுகையில் இந்திய அணி கத்துக்குட்டி. ஆனால் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வீராங்கனைகளுக்கு மேலாக பம்பரமாக சுழன்று கோல் போட விடாமல் பாதுகாத்துக் கொண்டனர். ஆஸ்திரேலியாவின் 9 பெனால்டி கார்னர் வாய்ப்புகளையும் சிதறடித்து விட்டனர். இந்த ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது. அரை இறுதியில் அர்ஜென்டினாவை இந்திய மகளிர் அணி எதிர்கொள்ள உள்ளது.

ஒலிம்பிக்கை பொருத்தவரை இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு இது மூன்றாவது ஒலிம்பிக் போட்டியாகும். கடந்த முறை ரியோவிலும் அதற்கு முன்னர் 1980இல் மாஸ்கோவிலும் பெரிதாக சாதிக்கவில்லை. அதற்கு இணையாக தற்போது அரையிறுதிக்கு முன்னேறி உலகின் தலைசிறந்த அணிகளில் ஒன்றாக ராணி ராம்பால் தலைமையிலான அணி உருவெடுத்துள்ளது.

Share This Article
Exit mobile version