இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் நடராஜனுக்கு அறுவை சிகிச்சை முடிந்தது

Vijaykumar 2 Views
1 Min Read

ஹைலைட்ஸ்:

  • இன்று கிரிக்கெட் வீரர் தங்கராசு நடராஜனுக்கு மூட்டு பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
  • நடராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் எனக்காக பிராத்தனை செய்த அனைவர்க்கும் நன்றி என்ன தெரிவித்துள்ளார்.
  • அவர் அறுவை சிகிச்சை பெற்று நலமாக உள்ளதை ரசிகர்களுக்கு தெரிவித்தார்.

ஐபிஎல் 2021 சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடிய இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும், தமிழகத்தை சேர்ந்த வீரருமான தங்கராசு நடராஜனுக்கு மூட்டு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பு ஆண்டில் விளையாட முடியாமல் போனது. மருத்துவமனையில் அறுவை சிகிச்சையை மேற்கொண்டால் மட்டுமே தான் அவரது காயத்திற்கு தீர்வு காணமுடியும் என்று மருத்துவர்கள் கூறிய காரணத்தினால் ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார்.

இந்நிலையில், இன்று அவருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நடராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் “இன்று எனக்கு மூட்டு பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்றும், சரியான முறையில் மிகவும் எளிமையாக பழகி எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவ நிபுணர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி என்றும் பிசிசிஐ-க்கு எனது நன்றிகள். எனது காயங்கள் முழுவதும் சரியாக கடவுளிடம் பிராத்தனை செய்த அனைவர்க்கும், எண்ணை வாழ்த்திய நல் உள்ளங்களுக்கும் நன்றி” என தெரிவித்துள்ளார்.

Share This Article
Exit mobile version