இந்தியன் 2 படப்பிடிப்பு மேலும் ஒத்திவைப்பு

Pradeepa 4 Views
1 Min Read

ஷங்கர் இயக்கத்தில் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைப்பில் கமலஹாசன் , கஹால் அரகர்வால் மற்றும் பலர் நடிக்கும் திரைப்படம் ‘இந்தியன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் பிப்ரவரி மாதம் நடைபெற்றது. அப்போது கிரேன் விபத்து காரணமாக மூன்று பேர் இறந்தனர். இதனால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது மேலும் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

கொரோனா தளர்வுக்கு பிறகு மற்ற திரைப்படங்களின் படப்பிடிப்பு தொடங்கினாலும் இந்த படத்தின் படப்பிடுப்பு ஆரம்பமாகாமல் உள்ளது. தயாரிப்பு நிறுவனம், ஷங்கர், கமலஹாசன் ஆகியிருக்கு இடையில் கருது வேறுபாடு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 60 சதவீத படப்பிடிப்பிற்கு 150 கோடி செலவு செய்துவிட்டார்களாம், மீதம் உள்ள படப்பிடிப்பிற்கு மேலும் 50 கோடி செலவு இருக்கிறது என்கிறார்கள்.

தற்போது கமலஹாசன் தேர்தல் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் இப்படத்தில் நடிப்பாரா அல்லது லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள விக்ரம் படப்பிடிப்பிற்கு செல்வாரா என்பது தெரியவில்லை. இப்போது டைரக்டர் ஷங்கர் ராம் சரண் நடிக்கும் படப்பிடிப்பில் உள்ளார்.

கமலஹாசன் நடிக்க ‘சுபாஷ் நாயுடு’ என்ற படத்தை தயாரிக்க பல கோடி செலவு செய்த லைக்கா நிறுவனம் அப்படத்தை தொடரவில்லை. இப்போது இந்தியன் 2 படத்திற்கு அதிக செலவு செய்துவிட்ட நிலையில் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்பது உறுதியாகாமல் இருக்கிறது.

தேர்தல் முடிந்த பிறகே இந்த படத்தின் நிலை என்பது தெரிய வாரும் என்று கூறுகிறார்கள்.

Share This Article
Exit mobile version