உலகளவில் தினசரி கொரோனா பாதிப்பிலும், உயிரிழப்பிலும் இந்தியா முதலிடம்!

Selvasanshi 2 Views
2 Min Read

ஹைலைட்ஸ்:

  • கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு 3,645 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • இந்தியாவில் புதிதாக 3,79,257 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இதுவரை நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி 15 கோடி பேருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

உலகத்தின் பல பகுதிகளில் குறிப்பாக இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை மக்களை ஆட்கொண்டு வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும் தடுக்ககவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் வைரசால் பாதிக்கப்பட்டு 3,645 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் நோய் தொற்றுக்கு புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், சிகிச்சை பெறுவோர், பலியானோர், சிகிச்சை பெறுவோர், இறப்பு விகிதம் ஆகியவற்றின் நிலவரம் குறித்து தினமும் காலை 9 மணியளவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் புதிதாக 3,79,257 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் அளிக்கப்பட்டு வருகிறது. எனவே தொற்று அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் பற்றாகுறை நிலவி வருகிறது. இதன் காரணமாக பலரும் பாதிப்படைந்து உயிரிழந்துள்ளனர். மேலும ஆக்சிஜன் பற்றாகுறையை நீக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி சில மாநிலங்களில் இரவு ஊரடங்கும் , முழு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது.

தற்போது நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.83 கோடியாக அதிகரித்துள்ளது.மேலும் மொத்த பலி எண்ணிக்கை 2.04 லட்சமாக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய் தொற்றிலிருந்து 2 லட்சத்து 69 ஆயிரத்து 507 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் இதுவரை நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி 15 கோடி பேருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1.50 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கொரோனாவுக்கு 30,84,814 பேர் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், தற்போது ஆக்சிஜன் பற்றாகுறையால் பல கொரோனா நோயாளிகள் இறந்து வருகின்றனர்.

Share This Article
Exit mobile version