தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு முந்தைய நாளை ஒப்பிடுகையில் வெறும் ஆறு என்ற எண்ணிக்கையில் குறைந்து உள்ளது. 17 மாவட்டங்களில் தொற்று சிறிது அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 506 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இவர்களில் 194 பேர் 12 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24 லட்சத்து 79 ஆயிரத்து 696 ஆக அதிகரித்துள்ளது. 5 ஆயிரத்து 537 பேர் ஒரே நாளில் தொற்று குணமாகி வீடு திரும்பியுள்ளனர். குறைந்து வந்த உயிரிழப்பு இரண்டாவது நாளாக 100 ஐ கடந்துள்ளது. 24 மணி நேரத்தில் 113 பேர் உயிரிழந்துள்ளனர்.
38 ஆயிரத்து 191 பேர் மாநிலம் முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டங்களைப் பொருத்தவரை கோவையில் 514 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஈரோடு மாவட்டத்தில் 420 பேருக்கும், சேலத்தில் 295 பேருக்கும், திருப்பூரில் 270 பேருக்கும், சென்னையில் 257 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும் தர்மபுரி, திருவண்ணாமலை, திருச்சி, விருதுநகர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் தினசரி தொற்று பாதிப்பு சிறிது அதிகரித்துள்ளது.