- தமிழகத்தில் வரும் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலுக்கான அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், பணப்பட்டுவாடாவை தடுக்கும் பொருட்டு வருமான வரித்துறையினரும் பறக்கும் படையினரும் அதிரடியான சோதனயை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, அரசியலில் முக்கிய அரசியல் புள்ளிகளை குறிவைத்து ஆய்வு நடத்தப்படுகிறது.
- அண்மையில், மக்கள் நீதி கட்சியின் பொருளாளர் சந்திரசேகர், திமுக வேட்பாளர் எ.வ.வேலு, அண்ணாநகர் திமுக வேட்பாளரின் மகன் உள்ளிட்டோர் வீடுகளிலும் அவர்களுக்கு சொந்தமான இடங்களிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
- இதைத்தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டிலும் மருமகன் சபரீசன் வீட்டிலும் தி.மு.க எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி வீட்டிலும் ஆய்வு நடத்தப்பட்டது.
- இந்த நிலையில், தேனி மாவட்டம் போடியில் உள்ள துணை முதல்வர் ஓ.பி.எஸ் அலுவலகம் அருகே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
- அ.தி.முகவை சேர்ந்த தேனி மாவட்ட ஜெ.பேரவை பொருளாளர் குறிஞ்சி மணி வீட்டில் ஐடி ஆய்வு நடக்கிறது. அதே போல, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வி.கோட்டையூரில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் வீட்டிலும் ஆய்வு நடக்கிறது.