வாக்குப்பதிவு நாளில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள்

Selvasanshi 4 Views
2 Min Read
  • ஏப்ரல் 6 ஆம் தேதி நடக்க இருக்கும் வாக்குப்பதிவு நாளில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
  • தமிழகத்தில் நாளை செவ்வாய் கிழமை காலை 7 மணி இருந்து இரவு 7 மணிவரை நடைப்பெற இருக்கும் வாக்குப்பதிவிற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் முடிவடைந்தது.
  • அனைத்து அரசியல் கட்சியினர்கள் மற்றும் வேட்பாளர்கள் வாக்குப்பதிவு நடைபெறும் நாள் அன்று கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.

தேர்தல் ஆணையத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் விவரம் கீழ் வருமாறு:

  • வாக்குப்பதிவு நாளில் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை தர வேண்டும். தேர்தலை சுமூகமாகவும்,அமைதியாகவும் நடைபெற வழிவகுக்கும். இதனால், வாக்காளர்கள் எந்தவித பிரச்சினைகள் இன்றி முழு சுதந்திரத்துடன் வாக்களிக்க முடியும்.
  • அரசியல் கட்சியால் நியமித்த தேர்தல் பணியாளர்கள் கண்டிப்பாக தேர்தல் முடியும்வரை தன்னுடைய அடையாள அட்டையினை அணிந்து கொள்ள வேண்டும்.
  • வாக்காளர்களுக்கு வழங்கப்படும் அலுவலகம் சாரா அடையாள சீட்டில் (பூத் சிலிப்) கட்சியின் பெயர், சின்னம் மற்றும் வேட்பாளர் பெயர் உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடக்கூடாது.
  • இன்று முதல் தேர்தல் நடந்து (48 மணி நேரம்) முடிவும் வரை மதுபானம் பயன்படுத்துதல் கூடாது.
  • வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடி மையத்திற்கு அருகில் இருக்கும் அரசியல் கட்சிகளால் அமைக்கப்படுகின்ற வாக்காளர் உதவி முகாமில் தேவையற்ற நெரிசல் (பிரச்சனை) உருவாகாத வகையில் செயல்பட வேண்டும். இதனால், அரசியல் கட்சியினருக்கு இடையே தேவையற்ற பதற்றம் மற்றும் பிரச்சனைகள் உருவாகாமல் தடுக்க முடியும்.
  • வேட்பாளர்களின் முகாம்கள் எளிமையாக இருப்பதனை போதுமான வசதிகளை கொண்டுயிருக்க வேண்டும். மேலும் கட்சியின் கொடி, சின்னங்கள், போஸ்டர்கள் மற்றும் விளம்பரங்களை காட்சிப்படுத்தக்கூடாது. மேலும் முகாம்களில் உணவு,குடிபானங்கள்,ஸ்னாக்ஸ் விற்பனை மேற்கொள்ளக்கூடாது.
  • வாக்குப்பதிவு நாளில் வாகனங்களை பயன்படுத்துதல் கூடாது,அலுவலர்களால் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை பின்பற்றி முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். வாகன அனுமதி சீட்டினை வெளியில் தெரியும் வகையில் காட்சிப்படுத்திட வேண்டும்.
  • மேற்கண்ட விதிமுறைகள் அனைத்தையும் பின்பற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
  • இந்த தேர்தலை எவ்வித பிரச்சனைகள் இன்றி நல்ல முறையில் நடக்க பொதுமக்கள் எங்களுக்கு ஓத்துழைப்பு தரவேண்டும் என்றும் கூறியுள்ளது.
Share This Article
Exit mobile version