டிஎன்பிஎஸ்சி தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு

Pradeepa 9 Views
1 Min Read

உதவி தோட்டக்கலை அலுவலர் , உதவி வேளாண்மை அலுவலர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி தேர்வு தொடர்பாக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் செய்தி அறிவித்துள்ள செய்தி குறிப்பில், “அரசு பணியாளர் தேர்வாணையமான, டிஎன்பிஎஸ்சி அறிவிப்பின்படி படி, உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர், தோட்டக்கலை உதவி இயக்குனர், தோட்டக்கலை அலுவலர், வேளாண்மை அலுவலர் விரிவாக்கம் ஆகிய பதவிகளுக்கான எழுத்து தேர்வு திட்டமிட்ட படி நடைபெறும் என்று கூறினார்.

ஏப்ரல் 17 மற்றும் 18ஆம் தேதி, காலை மற்றும் மதியம்; 19ஆம் தேதி காலை மட்டும், ஏழு மாவட்டங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெற உள்ளது.

விண்ணப்பதாரர்கள் தேர்வு நுழைவுச்சீட்டை, www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேர்வு மையத்தை அறிந்து கொள்ள, தேர்வு நுழைவு சீட்டில், ‘கியூஆர் கோடு’ அச்சிடப்பட்டுள்ளது. அதை, ‘ஸ்கேன்’ செய்து, ‘கூகுள் மேப்’ வழியே தேர்வு மையத்திற்கு செல்லலாம்.

நுழைவுச்சீட்டில் தேர்வு அறைக்குள், மொபைல் போன் எடுத்து செல்ல அனுமதி இல்லை” என்று கூறப்பட்டுள்ளது.

Share This Article
Exit mobile version