எய்ட்ஸ் நோயைக் குணப்படுத்தும் மருந்து

Selvasanshi 2 Views
1 Min Read

சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவர்கள் எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.

இன்றைய வரைக்கும் உயிர்க்கொல்லி நோய்கள் என்ற பட்டியலில் மக்கள் மனதில் முதலிடம் பிடித்திருக்கும் நோய் எய்ட்ஸ் தான். எந்த மருந்தாலும் குணப்படுத்த முடியாத அபாயகரமான நோய் எய்ட்ஸ் தான்.

இந்த நோய் விழிப்புணர்வின் மூலம் தான் கட்டுப்படுத்த முடியும் என்று அரசும், தன்னார்வாளர் அமைப்புகளும் செயல்பட்டு வந்தன. இந்த நோய் எளிதில் குணப்படுத்தமுடியாத நோயாக கருதப்பட்டது.

இந்நிலையில் சென்னை ஐஐடி-யில் உயிரி தொழில்நுட்பத் துறை பேராசிரியர் சந்தீப் சேனாபதி தலைமையில் ஆராய்ச்சியாளர்கள் எம்.முகமது ஹாசன், சின்மய் பிந்தி ஆகியோர் அடங்கிய ஆய்வுக் குழு எய்ட்ஸ் நோயைக் குணப்படுத்தும் புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளார்கள்.

அமெரிக்கன் கெமிக்கல்சொசைட்டி ஆய்விதழில் இந்தக் குழுவினரின் ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டு இருந்தது.

இதை தொடர்ந்து “மருந்துகளை செயல்படாமல் செய்யும் திறனுள்ள எய்ட்ஸ் நோய்க்கு, அதன் பலவீனமான பகுதியை மட்டும் கண்டறிந்து,நோய்க்கான மூலக்கூறு அமைப்பை சிதைக்கக் கூடிய மருந்தை செலுத்துவதன் மூலம் உடலுக்குள் எய்ட்ஸ் நோய் பரவலைக் குறைக்கலாம் மற்றும் படிப்படியாக இந்த நோய்கான மூல பிரச்சினையையும் சரிசெய்ய முடியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலையைச் செய்யும் மருந்தை சென்னை ஐஐடி மாணவர் குழு கண்டறிந்துள்ளது.

மேலும் தற்போதைய நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு பயனுள்ள பல புதிய மருந்துகளை உருவாக்கக் கூடிய தரவுகளையும் அவர்கள் உருவாக்கியுள்ளனர் என்று சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.

 

Share This Article
Exit mobile version