- Advertisement -
SHOP
Homeசெய்திகள்பெண் குழந்தைகளுக்கான SSY கணக்கினை தொடங்குவது எப்படி? தகுதி என்ன?

பெண் குழந்தைகளுக்கான SSY கணக்கினை தொடங்குவது எப்படி? தகுதி என்ன?

- Advertisement -
  • மத்திய அரசு 2015 ஆம் ஆண்டில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க பெற்றோரை ஊக்குவிக்கும் வகையில் சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY) திட்டத்தை தொடங்கியது.
  • இந்த கணக்கினை 10 வயதிற்குள் உள்ள பெண் குழந்தைகளுக்கு, பெற்றோர் அல்லது காப்பாளரின் உதவியுடன் தொடங்கலாம்.
  • இந்திய தபால் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஒரு பெற்றோர் இரு பெண் குழந்தைகளின் பெயரில் இந்த திட்டத்தைத் தொடங்கலாம்.
  • இத்திட்டத்தில் ஓராண்டில் குறைந்தபட்சமாக ரூ.1,000 முதல் அதிகபட்சமாக ரூ.1,50,000 வரை முதலீடு செய்யலாம்.
வட்டி விகிதம்

முதலீடு செய்யும் பணத்திற்கான வட்டி விகிதம் ஏப்ரல் – ஜூன் 2020 நிலவரப்படி 7.6% ஆக இருந்தது. இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் காலண்டுக்கு ஒரு முறை அரசால் மாற்றம் செய்யப்படும். இது முதலீட்டுக்கு நஷ்டமில்லாமல், கணிசமான லாபத்தினை கொடுப்பதால், பெண் குழந்தைகளின் வருங்காலத்திற்கு உதவியாக இருக்கும்.

இந்த சேமிப்புத் திட்டத்தை 14 ஆண்டுகள் வரை தொடர முடியும். எனவே ஓராண்டிற்கு ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், 14 ஆண்டுகள் முடிவில் ரூ.14 லட்சம் ஆகிறது. 21 ஆண்டுகளுக்குப் பின், வட்டி சேர்க்கப்பட்டு ரூ.46 லட்சமாக திரும்பக் கிடைக்கிறது.

இதேபோல் ஆண்டிற்கு ரூ.50,000 முதலீடு செய்தால் 14 ஆண்டுகளுக்கு பிறகு ரூ .7 லட்சம் ஆகிறது, 21 ஆண்டுக்கு பிறகு வட்டி சேர்த்து ரூ.23 லட்சமாக திரும்பக் கிடைக்கிறது.

SSY கணக்கினை தொடங்குவது எப்படி? தகுதி என்ன?

இந்த சேமிப்பு திட்டத்தை குழந்தை பிறந்த உடனே கூட ஆரம்பித்துக் கொள்ளலாம். பெண் குழந்தைகளுக்கு மட்டுமே சுகன்யா சமிர்தி கணக்கு வைக்க முடியும்.10 வயதிற்குள் உள்ள பெண் குழந்தைகள் தான் SSY கணக்கிற்கு தகுதியானவர்கள்.

இத்திட்டத்தின் கீழ் கணக்கு திறக்கும் போது, பெண் குழந்தைகள் 10 வயதுக்குள் இருக்க வேண்டும். SSY கணக்கைத் திறக்கும்போது, பெண் குழந்தையின் வயது ஆதாரம் முக்கியமாகும். இந்தியாவில் உள்ள அஞ்சலகங்களில் நீங்கள் இந்த கணக்கினை தொடங்க முடியும்.

மேலும் இந்த கணக்கினை பொதுத்துறை அல்லது தனியார் துறை வங்கிகள் மூலமும் தொடங்கி கொள்ளலாம். இல்லையெனில் ஆர்பிஐயின் இணையதளத்தில் https://rbidocs.rbi.org.in/rdocs/content/pdfs/494SSAC110315_A3.pdf இந்த படிவத்தினை டவுன்லோடு செய்து இந்த கணக்கினை தொடங்கி கொள்ளலாம்.

இது தவிர பொதுத்துறை வங்கிகளான எஸ்பிஐ, பிஎன்பி, பிஓபி வங்கிகளின் இணையத்திலும் படிவத்தினை டவுன் லோடு கணக்கினை தொடங்கி கொள்ளலாம்.

இது தவிர தனியார் வங்கிகளான ஐசிஐசிஐ வங்கி, ஹெச் டிஎஃப்சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி படிவத்தினை பூர்த்திஆகியவற்றின் இணையத்தளத்தில் இருந்தும் பெறலாம். டவுன்லோடு செய்த  செய்யவேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தில் கையொப்பமிட்டு, அதனை சம்பந்தபட்ட அஞ்சல் அலுவலகத்திலோ அல்லது வங்கிகளிலோ கொடுத்து, அதனுடன் சரியான ஆவணங்களையும் இணைத்து இந்த கணக்கினை தொடங்கலாம்.

சுகன்யா சமிர்தி திட்டத்தில் வரி சலுகைகள்

இந்த திட்டக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு 80c பிரிவின் கீழ் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்படும். இந்தத் திட்டத்தின் முதிர்வு தொகைக்கும் மற்றும் வட்டித் தொகைக்கும் விலக்கு அளிக்கப்படுகிறது.

அபராதம்

குறைந்தபட்சமாக ஆண்டுக்கு ரூ.1000 முதலீடு செய்யத் தவறினால், உங்கள் சேமிப்புக் கணக்கு செயலிழந்து விடும். உங்கள் கணக்கு செயலிழந்துவிட்டால் குறைந்தபட்சமாக ஆண்டிற்கு ரூ.50 அபராதம் செலுத்தி, மீண்டும் செயல்படச் செய்து கொள்ளலாம்.

முன் கூட்டியே பணத்தினை திரும்ப பெற முடியுமா?

உங்கள் பெண் குழந்தைக்கு 18 வயது முடிந்த உடன் இந்த பணத்தினை திரும்ப பெற முடியும். ஆனால் அதுவும் நிலுவையில் 50% தொகையினை குழந்தையின் கல்விச் செலவிற்கும் மட்டும் பெற முடியும். இதற்கு 18 வயது நிரம்பியதற்கான சான்று அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் வழங்க வேண்டும்.

ஒரு வேளை உங்களால் சுகன்யா சம்ரிதி கணக்கினை இடையில் தொடர முடியாமல் போனால், நீங்கள் செலுத்திய பணம் 15 வருடங்கள் கழித்து வட்டியுடன் திரும்ப கிடைக்கும்.

சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தின் முதிர்வு

SSY திட்டம், 21 ஆண்டுக்கு பிறகு நிறைவடையும் போது முதிர்ச்சியடைகிறது. முதிர்ச்சியடைந்ததும், நிலுவைத் தொகை, கணக்கில் நிலுவையில் உள்ள வட்டியுடன், கணக்கு வைத்திருப்பவருக்கு வழங்கப்படும்.

முதிர்ச்சியடைந்த பின்னர் SSY கணக்கு மூடப்படாவிட்டால், மீதமுள்ள தொகைவுடன் தொடர்ந்து வட்டி சேர்க்கப்படும். முக்கியமான விஷயம் என்னவென்றால், 21 வயது காலம் முடிவதற்குள் பெண் குழந்தைக்கு திருமணமானால் கணக்கு தானாகவே மூடப்படும்.

 

- Advertisement -
- Advertisement -
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -
Related News
- Advertisement -