கூகுள்பெ ,போன்பெ, பெடிஎம் மூலம் EMI செலுத்துவது எப்படி?

Vijaykumar 4 Views
2 Min Read

ஒரு காலத்தில் வங்கியில் கடன் வாங்க வேண்டும்? அதனை திருப்பி செலுத்தா வேண்டுமெனில் வங்கிக்கு சென்று மணிக் கணக்கில் நின்று தான் வாங்க வேண்டும், கட்ட வேண்டும்.

ஆனால் இன்றே உங்கள் வீட்டில் இருந்தவாரு, இந்த செயல்பாடுகளை செய்து கொள்ளும் அளவிற்க்கு தொழில்நுட்பம் முன்னேறிவிட்டது.

அந்த நிலையில் யுபிஐ பேமெண்ட் சேவைகள் வங்கி சேவைகளை இன்னும் எளிதாக்கும் விதமாக யுபிஐ பேமெண்ட் சேவைகள் வந்துள்ளது.

இந்த யுபிஐ சேவைகளை பயன்படுத்தி நீங்கள் வாங்கும் பால், காய்கறி, நகை, துணிகள், ரீசார்ஜ், பில் கட்டணங்கள், தங்கம் என அனைத்து பரிவர்தனைகளையும் பூர்த்திசெய்துகொள்ளலாம்

அந்தளவுக்கு மக்களுக்கு நிதி சேவைகளை எளிதாக கொண்டு சேர்க்கும்  நோக்கத்தில், இந்த யுபிஐ பேமெண்ட் சேவைகளுக்கு பெரும்பங்கு உண்டு. பெரிய கட்டணம் ஏதும் கிடையாது.

ஏனெனில் இதனை நாம் 24 மணி நேரமும் பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும். பயன்படுத்துவது மிக எளிது. அந்த வகையில் இந்த யுபிஐ ஐடிகளை பயன்படுத்தி தாமதமான இஎம்ஐகளை செலுத்திக் கொள்ளலாம் என்கிறது கோடக் வங்கி.

இஎம்ஐ செலுத்துவது எப்படி?

பேமெண்ட் ஆப்கலான கூகிள் பே, பேடிஎம், போன்பே போன்ற ஆப்பை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தவறவிட்ட அல்லது தாமதமான கடன் தவணைகளுக்கு பனம் செலுத்தகூடிய, புதிய வழியை கோடக் மகேந்திரா வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இது ரிசர்வ் வங்கியின் BBPS சேவையினை அடிப்படையாகக் கொண்டது. ஆக இதன் மூலம் வாடிக்கையாளர்கள் கடனை செலுத்த கோடக் மகேந்திரா பேங்க் லோன் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

என்னென்ன கடனை செலுத்தலாம்?

அப்படி தேர்வு செய்யும்போது உங்களது நிலுவையிலுள்ள மாத தவணை (EMI) மற்றும் அதன் தேதிகள் என அனைத்தும் இருக்கும். வாடிக்கையாளார்கள் இதன் மூலம் வீட்டுக் கடன், தனிநபர் கடன், நுகர்வோர் நீடித்த கடன், நகைக்கடன், வணிகக் கடன், தங்கள் சொத்துக்களுக்கு எதிரான கடன், டிராக்டர் நிதிக் கடன், கட்டுமான உபகரணங்கள் கடன், வர்த்தக வாகன கடன் போன்ற அனைத்தையும் இந்த ஆப் மூலம் திரும்ப செலுத்திக் கொள்ளலாம்.

எப்படி பேமெண்ட் செய்வது?

வாடிக்கையாளர்கள் தாங்கள் வைத்துள்ள பேமெண்ட் ஆப்பினை லாகின் செய்து அதன் பிறகு Kotak Mahindra bank loan என்ற ஆப்சனை தேர்வு செய்யவும்

அதன் பிறகு கோடக் மகேந்திரா கடன் அக்கவுண்ட் நம்பரை பதிவிடவும். பின் உங்களது ஓவர்டியூ இஎம்ஐ எவ்வளவு உள்ளது என மற்ற விவரங்களையும் பார்த்துக்கொள்ளலாம்.

அதன்பிறகு நிலுவையை கட்ட விரும்பினால், choose the amount அல்லது pay என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.

நிலுவை தொகையை செலுத்தியதும்,நிகழ் நேர அடிப்படையில் அது அப்டேட் செய்யப்படுகிறது.

எளிதாக செலுத்திக் கொள்ளலாம்?

இதைப்பற்றி கோடக் வங்கியின் President – Consumer Assets அம்புஜ் சந்த்னா கூறுகையில், பேமெண்ட் ஆப்கள் மிக வேகமாகவும் எளிமையாகவும், மக்களின் வசதிக்கு ஏற்ப பிரபலமாகி வருகின்றன. கோடக் வாடிக்கையாளர்கள் தங்களின் வசதிக்கு ஏற்ப கூகுள் பே, பேடிஎம், போன்பே உள்ளிட்ட ஆப்கள் மூலம் தங்களது தாமதமான தவணை தொகையை செலுத்தலாம். வாடிக்கையாளர்கள் தங்களது இஎம்ஐ செலுத்த தவறிய நேரங்கள் உள்ளன. இனி அவற்றை மிக எளிதாக தங்களுக்கு பிடித்த பேமெண்ட் ஆப்கள் மூலம் செலுத்திக் கொள்ளலாம்.

Share This Article
Exit mobile version