மாங்காயில் இனிப்பு ஊறுகாய் செய்வது எப்படி?

1 Min Read

மாங்காய் என்ற பெயரை கேட்டாலே வாயில் எச்சில் ஊறும். மாங்காய் விலை மலிவாகவும், மிக எளிதாகவும் கிடைக்க கூடியது. இதில் ஊறுகாய் செய்து சாப்பிட்டால் எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள். பொதுவாக மாங்காய் ஊறுகாயை விரும்பாதவர்கள் யாரும் இல்லை என்றே கூறலாம். மாங்காயில் இனிப்பு ஊறுகாய் செய்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும். இந்த ஊறுகாய் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

இனிப்பு ஊறுகாய் செய்ய தேவையான பொருட்கள்

மாங்காய் – 1 கிலோ,

உப்பு – 50 கிராம்,

மிளகாய்த்தூள் – 3 ஸ்பூன்,

வெல்லம் – 200 கிராம்,

நல்லெண்ணெய் – 100 கிராம்,

சிறிதளவு பெருங்காயம், வெந்தயம் தூள்,

கடுகு தலா – 1 ஸ்பூன்.

செய்முறை:

மாங்காயை சிறு சிறு துண்டுகளாய் நறுக்கி, உப்பு சேர்த்து 3 நாட்கள் ஊற வைக்கவேண்டும். பிறகு வெயிலில் நீர் சுண்டும் வரை உலர்த்தி எடுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு போட்டு தாளிக்கவும், பிறகு அதில் பெருங்காயம், மிளகாய் தூள், வெந்தயம் தூள் , மாங்காய் துண்டுகள் சேர்த்து பிரட்டி, மாங்காய் கலவையாக எடுத்துக்கொள்ளவும். அடுத்து வெல்லத்தை பொடி செய்து ஒரு பாத்திரத்தில் எடுத்து கொண்டு ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். நுரைத்து பாகு பதம் வரும் வரை கொதிக்க வைக்கவும். இந்த பாகு ஆறியவுடன், மாங்காய் கலவையை இதில் சேர்த்து கலக்கவும். பிறகு இதை ஒரு பாட்டிலில் நிரப்பி வைத்து கொள்ளவும். இந்த மாங்காய் கலவை வெல்லப்பாகில் ஊற ஊற சுவை அதிகரிக்கும்.

Share This Article
Exit mobile version