நல்ல காளானை தேர்தெடுப்பது எப்படி? டிப்ஸ்..!

Vijaykumar 66 Views
3 Min Read
  • இந்தியாவைப் பொறுத்த மட்டில் மொட்டு காளான்கள் மட்டுமே பெரிய அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. வெவ்வேறு அளவுகளில், சுவைகளில் இருக்கும் காளான்கள் பற்றி பலரும் தெரிந்திருக்கவாய்ப்பில்லை என்பதே உண்மை.
  • காளானை விரும்பி உண்பவர்களை நீங்கள், சந்தைகளில் வெவ்வேறு வகையான காளான்கள் உள்ளன.
  • இந்தியாவைப் பொறுத்த வரை பட்டன் காளான்கள் மட்டுமே பெரிய அளவில் விற்பனைச்செய்துவருகின்றனர்.
  • வெவ்வேறு விதமான அளவுகளிலும் சுவைகளிலும் இருக்கும் காளான்கள் பற்றி பலரும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால், புதிய காளான்களின் வகைகளை பற்றியும், நல்ல காளான்களை எப்படி தேர்வு செய்யலாம் என்தையும் இங்கே காணலாம்.

காளான்களை எப்படி தேர்தெடுப்பது?

* காளானில் எந்த புள்ளிகளும், கோடுகளும் இல்லாமல், உறுதியாக இருக்கும் காளான்களை தேர்ந்தெடுங்கள்.

* காளான்கள் நடுத்தர அல்லது பெரிய அளவில் இருக்க வேண்டும். நீங்கள் அவற்றை வாங்கும்போது அவை மெலிதாக இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

* காளான்கள் 3 அல்லது 4 நாட்களுக்கு மேல் சேமித்து வைக்க முடியாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்

* புதிய காளான்களை முழுமையாக மூடியோ அல்லது குளிர்சாதன பெட்டியில் காகித பையில் வைக்கலாம்.

* நீங்கள் வாங்கிய காளான்களை முதலில் தண்ணீரில் ஊறவைத்து, பின்னர் அவற்றை முழுமையாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும்

* காளான்களின் சுவைமாறாமல் இருக்க , அவற்றை நீண்ட நேரம் சமைக்காமல் இருப்பது நல்லது.

மோரெல் அல்லது குச்சி காளான்

இந்த வகை காளான்கள் மிகவும் காஸ்டிலியானவை . இந்தியாவில் பெருபாலும் ஹிமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் மட்டுமே கிடைக்கிறது. 18 முதல் 21 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலையில் மட்டுமே வளரும் காளான் என்பதால், நம்ம ஊர் வெப்பநிலையில் இந்த காளான்களை வளர்க்க முடியாது.

பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை மட்டுமே கிடைக்கும் இந்த காளான்கள் ஒரு கிலோ சுமார் 30 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. நல்ல

சுவை மிகுந்த குச்சிக் காளானை பிரைட் ரைஸ், ஆம்லெட் மற்றும் பாலாடைக் கட்டி ஆகியவற்றுடன் சேர்த்து உண்ணலாம்

சிப்பி காளான்

சிப்பிக் காளான்கள் திங்கிரி காளான்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. பெரிய அளவில் இருக்கும் இந்த காளான்கள், சிறிதளவு இனிப்பு சுவையுடன் காணப்படும்.வெண்ணெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால், தனிச்சுவை உண்டு

காளானை சேர்த்து காய்கறிகளின் கூட்டு மற்றும் நூடுல்ஸ், சூப்புகளுடன் உண்ணலாம். சிப்பிக்காளை சமையலின் இறுதிப் பகுதியில் சேர்ப்பது நல்லது.

போர்சினி காளான்

போர்சினி வகை காளான்கள் இத்தாலியை பிறப்பிடமாக கொண்டவை . காளானின் தலைப்பகுதி சிவப்பு மற்றும் பழுப்பு நிறத்திலும், தண்டுபகுதி வெள்ளை நிறத்திலும் இருக்கும். இவ்வகை காளான்களை ரிசொட்டோஸ் மற்றும் சூப் போன்றவைக்கு அதிகம் பயன்படுத்தலாம். வெண்ணெய் மற்றும் மூலிகை சூப்களில் போர்சினி காளானை சேர்க்கும்போது ஒருநல்ல சுவையை உணரலாம்.

போர்டோபெல்லோ

பெரும்பாலும் USA வில் வளர்க்கப்படும், போர்டோபெல்லோ காளான்கள் அளவில் பெரியதாக இருக்கும்.இந்த வகை காளான்கள் இறைச்சி சுவை கொண்டவை. போர்டோபெல்லோ காளான்கள் சிறிய தண்டுகளுடன் தட்டையான மற்றும் வட்ட வடிவத்தில் உள்ளன. இவ்வகை காளான்கள் சாண்ட்விச்கள், பீஸ்ஸா, பாஸ்தா மற்றும் ஆம்லெட்டுகளில் மாமிசத்திற்கு பதிலாக பயன்படுத்தப்படுகின்றன.

ஷிமேஜி

ஷிமேஜி என்பது சிறிய பழுப்பு நிற தலைப்பகுதி மற்றும் நீண்ட தண்டு கொண்ட ஒரு கொத்து காளான் வகையாகும். அவை ஜப்பானில் பெரும்பாலும் காணப்படுகின்றன. மேலும் இவை கடற்கரையோரப் பகுதிகளில் வளர்கின்றன. மிக அதிகமான சுவைகளுக்கு ஷிமேஜி காளான்கள் பெயர்பெற்றவை.

Share This Article
Exit mobile version