மார்ச் 31 ஆம் தேதி கடைசி நாள் பான் ஆதார் இணைப்பை செக் செய்வது எப்படி?

Pradeepa 3 Views
1 Min Read

மத்திய அரசு மார்ச் 31ஆம் தேதிக்குள் பான் கார்டு வைத்து இருக்கும் அனைவரும் பான் கார்டு எண்ணை தங்களது ஆதார் எண் உடன் இணைக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. பான் என்னுடன் ஆதார் கார்டு இணைப்பதற்க்கான கால அவகாசத்தை மத்திய அரசு பல முறை நீட்டிப்பு செய்தது. இந்த முறை அதற்க்கான கால அவகாசத்தை நீட்டிக்காமல் மார்ச் 31ஆம் தேதி இறுதி நாளாக அறிவித்துள்ளது.

மார்ச் 31ஆம் தேதிக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் உங்கள் பான் கார்டு செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

வருமான வரி செலுத்தும் பலரும் ஆதார் – பான் எண்-ஐ இணைந்திருக்க வாய்ப்பு உள்ளது, ஆனால் சரியாக உங்கள் பான் மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு உள்ளதா என்பதைச் செக் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

பான் ஆதார் எண் இணைப்பு

1. முதலில் வருமான வரித் தளத்திற்குச் செல்லுங்கள் https://www.incometaxindiaefiling.gov.in/home

2. மேல் உள்ள லிங்க்கை open செய்த பின்பு டேஷ்போர்டில் Profile Settings என்பதைக் கிளிக் செய்யுங்கள்.

3. Profile Settings-ல் இருக்கும் Link Aadhaar ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

4. ஏற்கனவே உங்கள் பான் எண் ஆதார் எண்ணுடன் இணைத்து இருந்தால் Your Pan is Linked to Aadhaar Number XXXX XXXX 1234 என்ற செய்தி கிடைக்கும்.

5. இல்லை என்றால் ஆதார் பான் இணைப்பதற்கான ஆப்ஷன் வரும்.

 

Share This Article
Exit mobile version