இந்தியாவில் மிக முக்கியமான ஆவணங்கலான ,ஆதார் மற்றும் பான் அட்டையை போன்று முக்கியமான ஆவணங்களில் ஒன்றான குடும்ப அட்டையையும் .மத்திய அரசு தற்போது அறிவித்துயுள்ள ஒரே நாடு ஒரே அட்டை முறையை பயன்படுத்தி இதன் மூலம் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை ரேஷன் கடையில் மலிவு விலையில் பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம். இதன்முலம் மக்கள் தாங்கள் விரும்பிய ரேஷன் கடையில் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும்.
தற்பொழுது பலருக்கும் தெரிவதில்லை ரேஷன் அட்டை ஏதேனும் திருத்தம் அல்லது பெயர் சேர்த்தல், நீக்குதல் ஆகியவற்றைக்கு அலைகின்றனர். ஆனால் இப்பொழுது இருந்த இடத்தித்திலிருதே மாற்றிக் கொள்ள முடியும் .
என்னென்ன பார்க்க போகிறோம்?
நாம் பார்க்கப்போவது ரேஷன் கார்டில் எப்படி புதிய குடும்ப உறுப்பினர் பெயரை சேர்ப்பது? எப்படி நீக்குவது? அதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை? உதாரணத்திற்கு புதிய குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையின் பெயரை ரேஷன் கார்டில் இணைப்பது?
என்ன ஆவணங்கள் தேவை?
குழந்தையின் பெயரை சேர்க்க வேண்டும் எனில், குழந்தையின் பிறப்பு சான்றிதழ், பெற்றோரின் ஆதார் கார்டு. குழந்தைக்கு ஆதார் கார்டு இருப்பின் குழந்தையில் ஆதார் கார்டு என அனைத்தும் கொடுக்க வேண்டும். அல்லது புதியதாக திருமணம் ஆய்ருந்தால் அந்த பெண்னின் திருமண சான்றிதழ், அவரின் ஆதார் அட்டை, பெற்றோரின் குடும்ப அட்டை, பெற்றோர் அட்டையில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட சான்று உள்ளிட்டவை தேவைப்படும்
பதிவேற்றம் செய்ய வேண்டியவை?
ஆதார் கார்டு
பேங்க் பாஸ்புக்
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
மின்சார கட்டண ரசீது/ தண்ணீர் வரி
டெலிபோன் பில்
வருமான சான்று
Receipt of ration card centre
Photo 1 – குடும்ப உறுப்பினர்களின் போட்டோ 1
ஆன்லைனில் எப்படி செய்வது?
ஆன்லைனில் பெயரை சேர்ப்பது? நீங்கள் இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும் https://www.tnpds.gov.in/இதில் மின்னணு அட்டை தொடர்பான சேவை என்று இருக்கும். அதில் உறுப்பினர் பெயர் சேர்க்க அல்லது நீக்க என சேவைகளுக்கான விருப்பதிகானதை தேர்வு செயவு . பின்னர் நீங்கள் ரேஷன் அட்டையில் கொடுத்த மொபைல் நம்பரை கொடுத்து, கேப்ட்சா குறியீட்டினை கொடுத்து பதிவு செய்ய வேண்டும்.
பெயர் சேர்க்க
பதிவு செய்த பிறகு உங்களது மொபைல் எண்ணுக்கு ஒடிபி வரும்.பின்பு ஓடிபியினை கொடுத்து கிளிக் செய்ய வேண்டும். பின்பு மற்றொரு பக்கத்திற்கு செல்லும். அதில் ஏற்கனவே இருக்கும் குடும்ப உறுப்பினர்கள், அவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இருக்கும். அந்த விவரங்களுக்கு கீழாக புதிய உறுப்பினர் சேர்க்கை என்பதை கிளிக் செய்யவும்.
என்னென்ன விவரங்கள்
name என்ற இடத்தில் ஆங்கிலத்தில் கேப்பிட்டல் லெட்டரில் பெயரை கொடுக்கவும். அதன் பிறகு பெயர் என்ற இடத்தில் தமிழில் பெயரை கொடுக்கவும். பிறகு பாலினம் என்பதில் ஆண் / பெண் என்பதை தேர்தெடுக்கவும். அடுத்து பிறந்த தேதி, உறவு முறை என்பதை தேர்வு செய்யவும் . அடுத்து ஆதார் நம்பர் கொடுத்து, அதன் பிறகு ஆதாரினை பதிவேற்றம் செய்ய வேண்டும். (1 MB இருக்க வேண்டும்). பதிவேற்றம் செய்த பிறகு உறுப்பினரை சேர்க்க என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
குறிப்பு எண் விவரம் கொடுக்க வேண்டும்
இதன் பிறகு நீங்கள் கொடுத்த விவரங்களை சரியாகவுள்ளதா என்று பார்த்துக்கொள்ளுங்கள் , தவறுகள் இருந்தால் திருத்திக் கொள்ளுங்கள். அதன் பிறகு உறுதிபடுத்தல் என்றதை கிளிக் செய்து, இதனை கொடுத்த பிறகு நீங்கள் சரியாக செய்திருந்தால் உங்களது கோரிக்கை வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டுவிட்டது. என குறிப்பு எண் என ஒரு நம்பர் வரும். (ஸ்கீரி ஷாட் அல்லது பிடிஎஃப்) எடுத்துக் கொள்ளுங்கள்.
என்ன நிலை?
இதன் பிறகு மீண்டும் ஆரம்பத்தில் சென்ற https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். நம்பரை கொடுத்து செக் செய்து கொள்ளலாம். நீங்கள் அனுப்பிய ஆவணங்கள், விவரங்கள் சரியென்றால், அதிகாரிகள் அதனை சோதித்து உங்களது முகவரிக்கு ரேஷன் கார்டினை அனுப்புவார்கள்.