ஹோரை தமிழில்

sowmiya p 1 View
5 Min Read

ஜோதிடத்தில் ஒவ்வொரு தினமும் பஞ்சாங்கத்தில் ஹோரை நேரங்கள் என குறிப்பிடப்படுகின்றன. இந்த ஹோரை நேரம் என்றால் என்ன, அதன் முக்கியத்துவம், அந்த நேரங்களை சரியாக பயன்படுத்தினால் நம் வாழ்க்கையில் வெற்றி தான்….

எந்த ஹோரையில் என்ன செய்ய வேண்டும்?

  • ஜோதிட பஞ்சாங்கத்தில் மிக முக்கியமான அம்சம் கிரகங்கள். ஒரு நாளில் ஒவ்வொரு கிரகத்திற்கும் என ஒரு குறிப்பிட்ட நேரம் ஆதிக்கம் செலுத்தும் வகையில் அமைந்திருக்கின்றன. அதோடு எந்த கிழமையில் எந்த கிரகம் ஆதிக்கம் பெற்று விளங்கும். எந்த ஹோரையில் சுப நிகழ்ச்சிகள் துவங்க வேண்டும் என அனைத்தும் ஹோரையின் படி தான் நடக்கிறது

ஹோரை என்றால் என்ன?

  • சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய் என வரிசையாக மொத்தம் 7 ஹோரைகள் உள்ளன. இந்த வரிசையிலேயே ஹோரை நேரங்கள் வரும்.
  • காலையில் சூரிய உதயம் ஆன முதல் அன்று எந்த கிழமையோ, அந்த கிழமைக்கான உரிய ஹோரை தொடங்கும்.
  • ஞாயிற்றுக் கிழமையை எடுத்துக் கொண்டால் அந்த நாளில் சூரிய ஹோரை காலை 6 – 7 என அந்த நாள் ஆரம்பமாகும்.
  • இதே போல் திங்கட் கிழமையில் சந்திர ஹோரையும், செவ்வாய்க் கிழமை செவ்வாய் ஹோரையும், புதனன்று புதன் ஹோரை, வியாழனன்று குரு ஹோரை, வெள்ளியன்று சுக்கிர ஹோரை, சனியன்று சனி ஹோரை என ஒவ்வொரு நாளுக்குரிய ஹோரையுடன் ஆரம்பமாகும்.

ஹோரைகளின் சுப மற்றும் அசுப பலன்கள் :

  • ஹோரைகளைக் கணக்கிடும் போது சூரிய உதயம் முதல் ஒவ்வொரு ஹோரையும் கொடுக்கும் பலனை வைத்து தான் கணக்கிடப்படுகிறது. ஒரு கிரகத்திற்கும் மற்றொரு கிரகத்திற்கும் நட்பு மற்றும் பகை என உண்டு. அதன் அடிப்படையில் நல்ல சுப பலன் தரக்கூடிய ஹோரை என்றும், அசுப பலன் கொடுக்கும் ஹோரை தோஷம் என்றும் கூறுகிறோம்.
  • ஒவ்வொரு ஹோரைக்கும் உரிய கடவுளை வணங்கி, அதற்குரிய பரிகாரத்தை செய்யலாம், அதோடு மற்ற தோஷங்களைப் போல் இல்லாமல் ஹோரை தோஷம் பெரிதாக பயப்படக் கூடியது அல்ல.
  • இனி ஒவ்வொரு ஹோரைக்கும் அது கொடுக்கும் பலன்கள் குறித்து விரிவாக பார்ப்போம். கீழே ஒவ்வொரு நாளுக்குரிய ஹோரை நேரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

சூரிய ஹோரை:

  • திய தொழில், வியாபாரம் தொடங்க, உத்தியோகம், ஒருவரிடம் உதவி கேட்க, உங்களின் மேல் அதிகாரியை சந்திக்க, உயில் எழுத, வீடு, வாகனம் பதிவு செய்தல், நமக்கான சிபாரிசு, ஆலோசனை கேட்டல், பிற ஆலோசனை என முக்கிய காரணத்திற்கு இந்த சூரிய ஹோரை காலங்களை தேர்ந்தெடுக்கலாம்.
  • எக்காரணம் கொண்டும் சூரிய ஹோரை நேரத்தில் வீடு குடி போகக் கூடாது.

சந்திர ஹோரை:

  • புதிய தொழில், வியாபாரம் தொடங்க, திருமண விஷயங்களை பேசுதல், வெளிநாடு செல்லுதல் போன்றவற்றிற்குச் சந்திர ஹோரையை தேர்வு செய்வது நல்லது. கிருஷ்ணபட்ச சந்திரனாக இருந்தால், அதாவது தேய்பிறை சந்திரனாக இருந்தால் மேற்குரியவற்றை தவிர்ப்பது நன்று.

செவ்வாய் ஹோரை:

  • செவ்வாய்க் கிழமைகளில் புதிதாக எந்த ஒரு காரியத்தையும் செய்யாமல் இருப்பதே நல்லது. அதனை நாம் யோசனையாக வைத்துக் கொண்டு மற்ற தினங்களில் செயல்படுத்தலாம். மீறி நம் கருத்துக்கள், யோசனைகளை வெளியிட்டால் மிகுந்த துன்பங்களை அனுபவிக்க வேண்டி இருக்கும்.
  • இதன் காரணமாக தான் செவ்வய் கிழமைகளில் தெய்வ வழிபாடு தவிர மற்ற நலல காரியங்களை தவிர்த்து விடுகின்றனர். நேர்மறை வார்த்தைகளை பேசுதல், கருத்துக்களைத் தெரிவித்தல், கெடுதல் வராமல் தவிர்க்கலாம்.

​புதன் ஹோரை:

  • புதன் ஹோரையில் எழுத்து பணிகளுக்கு மிகவும் உரிய காலம். கல்வி கடவுகளாக புதன் பார்க்கப்படுவதால், தேர்வுகள் எழுதினால் வெற்றி கிடைக்கும். எல்லா விதமான ஆராய்ச்சியையும் தொடங்கலாம். தொலை தூர தொடர்புக்கு உகந்த தந்தி, பேக்ஸ் அனுப்புதல், வழக்கறிஞர்களை சந்தித்து பேசுதல், சுப காரியங்கள் குறித்து தாய் வழி உறவினர்களுடம் பேசுவதற்கு உகந்த காலம்.
  • புதிய நிலம் வாங்குதல், பெண் பார்க்க செல்லுதல், அது தொடர்ப்பான பேச்சு வார்த்தை நடத்தக் கூடாது.

​குரு ஹோரை:

  • அனைத்து சுப காரியங்களுக்கும் ஏற்றது குரு ஹோரை. திரு மாங்கல்யத்துக்கு தங்கம் வாங்க, ஆடை, ஆபரணம் வாங்க மிக ஏற்ற நேரம் குரு ஹோரை. குரு மிகவும் சுப கிரகம் என்பதால், அந்த நேரத்தில் எது செய்தாலும் அது நல்ல பலனையே தரும். நகை தொடர்பான வேலை, கடை தொடங்க மிக ஏற்ற நேரம்.
  • விவசாயம் செய்ய, வீடு, மனை வாங்குதல், விற்க என எதை செய்தாலும் உகந்ததாக இருக்கும். புதிய தொழில் தொடங்கலாம்.
  • திருமணத்திற்கான சுப முகூர்த்த நேரத்திற்கும், விருந்து, விழாக்களுக்கானதும், சாந்தி முகூர்த்தத்திற்கு மிக உகந்த நேரம் இந்த குரு ஹோரை. வீடு, மனை வாங்க விற்கு மிக ஏற்றது. ஆனால் எதுவும் சட்டத்திற்கு புறம்பாக இருக்கக் கூடாது.

சுக்கிர ஹோரை:

  • சுப காரியங்களுக்கு ஏற்ற நேரம், பெண் பார்த்தல், திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தை, விருந்து, விழா, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுதல், புதிய வாகனம், வாங்க சுக்கிர ஹோரை மிக சிறந்தது. இந்த ஹோரையில் ஏதேனும் ஒரு பொருள் காணாமல் போனால், அது மேற்கு திசையில் சில நாட்களிலேயே கிடைத்துவிடும்.
  • இருப்பினும் இந்த சுக்கிர ஹோரை நேரத்தில் கடன் மட்டும் கொடுக்கக் கூடாது. கடன் வசூலிக்கலாம். மருந்து சாப்பிடலாம்.

​சனி ஹோரை:

  • பொதுவாக சனி ஹோரை அசுப ஹோரை என சொல்வார்கள். இதனால் இந்த ஹோரையில் சில காரியங்களுக்கு மட்டுமே சிறப்பான பலன்கள் தரும். கடனை அடைப்பதற்கான நல்ல நேரம் என்றால் சனி ஹோரை தான். சனி ஹோரையில் கடன் திருப்பிக் கொடுக்க வேகமாக கடன் அடையும். மீண்டும் கடன் வாங்கா சூழல் உருவாகும்.
  • மருத்துவமனைக்கு செல்லுதல், அறுவைசிகிச்சை செய்தல், கடன் வாங்குதல் செய்யக் கூடாது. ஏனென்றால் அது தொடரும் என்பது ஐதீகம்.

எந்த நாளில் எந்த ஹோரை சுபம்:

அடிப்படை ஜோதிடம்:

  • நவகிரகங்களில் ஒன்றுக்கொன்று நண்பர்களாகவும், பகையாகவும் உண்டு. இதனை மனதில் வைத்து ஜோதிடர்கள் உங்களுக்கான ஹோரைகளை தேர்ந்தெடுத்துச் சொல்வார்கள்.

எந்த நாளி எந்த ஹோரை சுபம்:

  • ஞாயிறு கிழமைகளில் சனி, சுக்கிர ஹோரைகள் பலன் தராது.
  • திங்கள் கிழமைகளில் சனி ஹோரை பலன் தராது.
  • செவ்வாய்க் கிழமைகளில் சனி, புதன் ஹோரை பலன் தராது.
  • புதன் கிழமைகளில் குரு, சந்திர ஹோரை பலன் தராது.
  • வியாழக் கிழமைகளில் சுக்கிரன், புதன் ஹோரை பலன் தராது.
  • வெள்ளிக் கிழமைகளில் குரு, சூரிய ஹோரை பலன் தராது.
  • சனிக்கிழமைகளில் சூரியன், சந்திரன் சனி ஹோரை பலன் தராது.

எந்த ஹோரை சிறந்தது:

  • இப்படி எந்த கிழமைகளில் எந்த ஹோரை சிறந்தது அல்லது சிறந்தது அல்ல என தேர்வு செய்து செயல்பட்டால் வாழ்வில் எல்லாம் வெற்றி. மனித வாழ்வில் ஹோரைகளின் பங்களிப்பு மகத்தானது. நம்மை அறியாமலே ஹோரைகளுக்குரிய கதிர்வீச்சை நாம் உணர முடியும். அதை உணர்ந்து நடந்து கொண்டால் எல்லாம் நலம் பெறும்.
  • எந்த நாளாக இருந்தாலும் செவ்வாய், சனி ஹோரைகள் வந்தால் அடக்கி வாசியுங்கள். ஒவ்வொரு நாளையும் கணக்கு போட்டு நடந்து கொள்ளுங்கள் எல்லாம் சிறப்பான வெற்றியை தரும்.
Share This Article
Exit mobile version