பூச்சி கடிக்கு வீட்டு வைத்தியங்கள்

Selvasanshi 64 Views
3 Min Read

தேனீகள், குளவிகள் மற்றும் சிலந்திகள் போன்ற சிறிய பூச்சிகள் நம்மை கடித்தால் கூட நச்சுக்கள் உண்டாக வாய்ப்புள்ளது. இந்த நச்சுக்கள் மனிதர்களின் சருமத்தில் அழற்சியை உண்டாக்கும்.

அதனால் இந்த மாதிரியான பூச்சிக் கடிக்கு ஆரம்ப வைத்தியமாக சில வீட்டு வைத்திய முறைகள் பின்பற்றுவது மிகவும் நல்லது. வீட்டு வைத்திய முறைகள் நம் சரும அழற்சியை குறைக்க உதவும்.

பொதுவாக சின்னச் சின்ன பூச்சிக் கடியை நாம் சாதாரணமாக விட்டு விடுகிறோம். ஆனால் அதுவே பின்னாளில் நமக்கு எரிச்சல், சரும அழற்சி போன்றவற்றை உருவாக்க கூடும்.

ஒரு சில சிறிய பூச்சிகள் கூட நிறைய நச்சுத்தன்மை கொண்டதாக இருக்கும். எனவே பூச்சிக் கடியை நீங்கள் சாதாரணமாக எடுத்து கொள்ளவேண்டாம்.

கொசு, தேனீ, குளவிகள் மற்றும் சிலந்திகள் போன்றவை நாம் வாழும் இடங்களைச் சுற்றி அதிகமாகவே இருக்கும். இந்த பூச்சிகள் நம்மை அதிகமாக கடிக்க வாய்ப்பு உள்ளது.

இந்த சிறு பூச்சிகள் மழைக்காலத்திலும் வெயில் காலத்திலும் அதிகமாகவே இருக்கும். பூச்சிகள் கடித்து விட்டால் உடனே விஷம் ஏறாமல் இருக்க வீட்டு வைத்திய முறையில் நாம் என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.

வெங்காயம்

வெங்காயத்தில் என்சைம் அதிகளவு காணப்படுகிறது. இது அழற்சியை ஏற்படுத்தும் சேர்மங்களை உடைக்க செய்கிறது.

ஒரு வெங்காயத்தை வெட்டி அதை கொடுக்கு உள்ள இடத்தில் வைத்து தேய்க்கவும், அரிப்பு குறையும் வரை தேயிக்க வேண்டும்.இதனால் அழற்சி ஏதும் ஏற்படாது.

​இலவங்கப்பட்டை

சிறிது இலவங்கப்பட்டையை பொடி செய்து தண்ணீரில் கலந்து பேஸ்ட்டாக்கி கொள்ளவேண்டும். இந்த பேஸ்ட்டை பூச்சி கடித்த பகுதியில் தடவி ஒரு மணி நேரம் வரை இருக்கவும்.

ஒரு வேளை இது பூச்சிக்கடியால் ஏற்பட்ட அழற்சியாக இருந்தால் இலவங்கப்பட்டை குறைத்து விடும். இலவங்கப்பட்டையில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாகவே காணப்படுகிறது. இது நமக்கு உடனடி நிவாரணம் அளிக்கிறது.

​ஐஸ் பேக் ஒத்தடம்

ஐஸ் கட்டியை வைத்து 20 நிமிடங்கள் பூச்சிக்கடித்த இடத்தில் ஒத்தடம் கொடுக்கவேண்டும். அது அந்தப் பகுதியை உணர்வு இல்லாமல் ஆக்கி வீக்கத்தை குறைக்கிறது.

​பப்பாளி

பப்பாளி பழத்தில் இருக்கும் நொதிகள் பூச்சிக்கடியால் ஏற்படும் விஷத்தை முறியடிக்க உதவுகிறது. உடனடி நிவாரணத்திற்காக பூச்சிகடி உள்ள இடத்தில் பப்பாளி பழத் துண்டுகளை வைக்க வேண்டும். இது அந்த இடத்தில் உள்ள விஷத்தை முறியடிக்கும் .

​​துளசி இலைகள்

துளசி இலைகளை எடுத்து நசுக்கி அதன் சாற்றை பூச்சிக்கடி ஏற்பட்ட இடத்தில் தடவினால் அரிப்பு நீங்கும். மேலும் கற்பூரம் மற்றும் தைமோல் போன்ற பொருட்கள் அரிப்பு நீங்க உதவுகிறது.

​தேநீர் பேக்குகள்

தேயிலையில் உள்ள டானின்கள் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. டீ பேக்குகளில் உள்ள தேயிலை குளிர்ச்சி தன்மை உடையது மற்றும் பூச்சிக்கடி வீக்கத்தை குறைக்கும் தன்மி கொண்டது .

அதனால் பூச்சிக் கடிக்கு தேயிலை ஒரு சிறந்த மருந்தாக உதவுகிறது.

​கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்லில் ஆன்டி செப்டிக் தன்மை அதிகமாக காணப்படுகிறது. இது பூச்சிக் கடியை குணப்படுத்த உதவுகிறது. கற்றாழை ஜெல்லை காயம் ஏற்பட்ட இடத்தில் தடவினால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

கற்றாழை ஜெல் பூச்சிக் கடியால் ஏற்படும் வலியின் வேதனையை முடிந்த அளவுக்கு குறைக்கும்.

டூத்பேஸ்ட்

பூச்சிக்கடி ஏற்பட்ட இடத்தில் பஞ்சில் டூத்பேஸ்ட்டை வைத்து தடவினால் பூச்சிக்கடி நிவாரணம் அடையும். டூத்பேஸ்ட்டில் மெந்தால் மற்றும் பேக்கிங் சோடா போன்றவை பொருட்கள் உள்ளது. இது பூச்சிக்கடிக்கு நிவாரணம் அளிக்கிறது.

​ஆல்கஹால்

ஆல்கஹால் பூச்சிக்கடியால் ஏற்படும் அரிப்பை குறைக்க உதவுகிறது. பூச்சிக்கடி ஏற்பட்ட இடத்தில் ஆல்கஹால் அல்லது மவுத்வாஷை அப்ளே செய்தால் பூச்சிக்கடி அரிப்பு குறையும்.

Share This Article
Exit mobile version