முகத்திற்கு ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

Vijaykumar 10 Views
2 Min Read

அருகம்புல்லை பயன்படுத்தி ஆவி பிடித்து வருவதன் மூலம் முகத்தில் உள்ள அழுக்குகள் சீக்கிரம் நீங்கிவிடும். இந்த முறையே மிகவும் சிறந்தது. இதனால் எப்போது ஆவி பிடிக்கின்றோமோ அப்போது முகத்தை சுத்தமான நீரினால் கழுவிய பின் துணியால் துடைக்கும் போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் போய்விடும்.

ஆவி பிடிப்பதன் மூலம் ஏற்படும் பயன்கள் பற்றி காண்போம் !

1. ஆவி பிடுப்பதன் மூலம் முகத்தின் துளை வழியே நீர் துளிகள் சென்று கரும்புள்ளிகளையும் ,வெள்ளை புள்ளிகளையும் எளிதில் நீங்கிவிடும். அதற்கு 5 முதல் 10 நிமிடம் ஆவி பிடித்து, பின் தேய்த்தால், மூக்கில் காணப்படும்

வெள்ளையான புள்ளிகள் வந்துவிடும். மேலும் அவை எளிதில் வருவதோடு, கரும்புள்ளிகள் வேரோடு வந்துவிடும். பின்னர் அவை வராமல் தடுக்கும்.

2.ஆவி பிடிப்பதால், முகத்தில் உள்ள சின்ன சின்ன பருக்கள், கருவாலயம் போன்றவை குறையும்.

ஆவி பிடிக்கும் போது முகத்தின் துளைகளின் வழியே எண்ணெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சருமத்திற்கு ஏற்ற இயற்கை எண்ணெயால், சருமம் எண்ணெய் பசையோடு இருப்பதால், துளைகளில் சேரும் அழுக்குகள் அல்லது டாக்ஸின்களால் ஏற்படும் பருக்கள், துணியால் துடைக்கும் போது நீங்கிவிடும்.

3. ஆவி பிடிப்பதன் விளைவாக, சுருக்கியது போல் காணப்படும் முகம், முதுமை போன்ற தோற்றதையும் தடுக்கும். எவ்வாறென்றால், சருமத்தில் அழுக்குகள் படித்து நீங்காமல் தங்கிவிடுவதால் முகம் மிகவும் சோர்வுற்று, முதுமை தோற்றத்தோடு காணப்படுகிறது.

அவ்வபோது ஆவி பிடித்தால், அந்த அழுக்குகளை நீக்கி, முகத்தை பளிச்சென்றும், முகத்திற்கு இளமைத் தோற்றதையும் தரும்.

4. முகத்தில் முகப்பருகள் வரும் போது 4-5 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். பின் 30 நிமிடம் காத்திருந்து, பின்னர் ஐஸ் கட்டிகளால், முகத்தை மசாஜ் செய்தல் முகப்பரு உடைந்துவிடும். இதனால் ஒரே நாளில் முகப்பருக்களை சிறப்பான குறைத்துவிடலாம்.

5. ஆவி பிடிக்கும் போது முகத்திற்கு நல்ல இரத்த ஓட்டம் கிடைக்கும். மேலும் முகத்தில் உள்ள துளைகள் நன்கு சுவாசிக்கும் தன்மையை பெற்றிருக்கும். அதனால் சருமம் அழகாகவும் , பொலிவுடனும் காணப்படும்.

Share This Article
Exit mobile version