தமிழகத்தில் மார்ச் 22 முதல் 9,10,11 வகுப்புகளுக்கு விடுமுறை  

Selvasanshi 1 View
1 Min Read

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் மார்ச் 22-ந் தேதி முதல் 9,10 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கபடுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது. அதேபோல் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது  மக்களுக்கிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தஞ்சாவூர் மற்றும்  திருச்சியில் பள்ளி  மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா பரவல் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் தமிழக அரசு உடனடியாக பள்ளிகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளது.

இதனை தொடர்ந்து  வரும் 22-ந் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை 9,10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதேசமயத்தில் மாணவர்களின் விடுதிகளும் மூடப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இணைய தளம்  மூலம் கற்பிக்கும்  முறை தொடர்ந்து நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்து  உள்ளது.

 

Share This Article
Exit mobile version