- Advertisement -
Homeசெய்திகள்தனியார் பள்ளிகளுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

தனியார் பள்ளிகளுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

- Advertisement -

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கால் தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் வசூலிப்பதற்கு தமிழக அரசு தடை விதித்து இருந்தது. இதனை எதிர்த்து தனியார் பள்ளிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகள் 85% கல்விக் கட்டணத்தை வசூலிக்கலாம் என்றும், கொரோனா சூழலால் வருமானம் பாதிக்கப்பட்டவர்கள் 75 % கல்விக் கட்டணம் செலுத்தலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகள் 85% கல்விக் கட்டணத்தை 6 தவணைகளாக வசூலிக்கலாம் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா சூழலால் வேலை இழந்தவர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி கட்டணத்தை குறித்து பள்ளிகளில் முறையீடு செய்யலாம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. RTE சட்டத்தில் நிரப்பப்படாத இடங்களை கட்டணம் செலுத்த இயலாதவர்களுக்கு ஒதுக்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கல்விக் கட்டணம் செலுத்ததா மாணவர்கள் பள்ளிகளில் இருந்து நீக்கப்படமாட்டார்கள் எனவும் பள்ளிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -
- Advertisement -
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -
Related News
- Advertisement -