கீழமை நீதிமன்றங்களின் பணிகள் மறு உத்தரவு வரும் வரை இயங்காது – உயர்நீதிமன்றம் அறிவிப்பு

Selvasanshi 1 View
1 Min Read

ஹைலைட்ஸ்:

  • சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தனபால் சில உத்தரவுகளைப் பிறப்பித்து இருக்கிறார்.
  • தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களின் பணிகள் மறு உத்தரவு வரும் வரை இயங்க கூடாது
  • கைதிகளை சிறையில் அடைப்பதற்கான நடைமுறையை தவிர, மற்ற பணிகள் நிறுத்திவைக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நெல்லை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நீஷ் இன்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களின் பணிகள் மறு உத்தரவு வரை நிறுத்தி வைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த வாரம், கீழமை நீதிமன்ற நீதிபதிகள் காணொலியில் வழக்குகளை விசாரிக்க அனுமதிக்க கோரி தமிழ்நாடு நீதிபதிகள் சங்கம் கோரிக்கை வைத்திருந்தது. இந்த கோரிக்கை பரிசீலனையில் உள்ள நிலையில் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மரணம் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்தச் சூழ்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தனபால் சில உத்தரவுகளைப் பிறப்பித்து இருக்கிறார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களின் பணிகள் மறு உத்தரவு வரும் வரை இயங்க கூடாது.

கைதிகளை சிறையில் அடைப்பதற்கான நடைமுறையை தவிர, மற்ற பணிகள் நிறுத்திவைக்கப்படுகிறது.

அனைத்து கீழமை நீதிமன்ற வளாகங்களிலும் வழக்கறிஞர்கள் மற்றும் வழக்காடிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்களுக்கு வர வேண்டுமென்றால் நீதிபதிகளின் முன் அனுமதியைப் பெற வேண்டும்.

நீதிபதிகள், நீதித்துறை ஊழியர்கள் தேவையில்லாமல் நீதிமன்றக் கட்டிடங்களுக்குள் நுழைய வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Exit mobile version