கண்களின் ஆரோக்கிய நன்மைகள்

Pradeepa 1 View
2 Min Read

கண் உங்கள் ஐந்து புலன்களில் மிக முக்கியமான உறுப்பு ஆகும் .கண்ணுக்கு அத்தியாவசிய தேவையான ஒன்று வைட்டமின் ‘A’ இதனால் கண்களை பாதுகாப்பாகவும் நல்ல பார்வையும் பெற முடியும். நல்ல கண் ஆரோக்கியம் உங்கள் தட்டில் உள்ள உணவிலிருந்து தொடங்குகிறது. ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், லுடீன், துத்தநாகம் மற்றும் வைட்டமின்கள் C மற்றும் E போன்ற ஊட்டச்சத்துக்கள் வயது தொடர்பான பார்வை சிக்கல்களை மாகுலர் சிதைவு மற்றும் கண்புரை போன்றவற்றிலிருந்து அகற்ற உதவும்.

கண்களைக்காக்கும் வைட்டமின் ‘A’ உணவுகள் :

எல்லாவித ஆரஞ்சு, மஞ்சள் நிற காய்கறிகளிலும் மற்றும் பசலைக்கீரை , கொத்தமல்லி கீரைகளிலும் உள்ளன. மாமிச உணவுகளான மின், லீவா, முட்டைகள் போன்ற உணவுகளில் வைட்டமின் ‘A’ கிடைக்ககிறது.

கண்புரை வராமல் தடுக்க வைட்டமின் ‘c ‘ சத்து கொண்ட உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

நம் முகத்திற்க்கு அழகை சேர்க்கும் கண்களை காக்கும் வழிமுறைகள் கீழ்கண்டவாறு காண்போம்:

  • வாரத்திற்கு 3 முறை, இரவில் படுக்கும் போது 2 துளி விளக்கெண்ணெயை கண்களை சுற்றி இருக்கும் கருவளையங்களில் மீது சிறிய நேரம் மசாஜ் செய்தால் , கண்கள் குளிர்ச்சியாகவும், பிரகாசமாகவும் இருக்கும்.
  • மாதத்திற்க்கு 4 முறை இரவில் படுப்பதற்கு முன் 2 துளிகள் சுத்தமான தேங்காய் எண்ணெயை கண்களில் விடுவதன் மூலம் கண் தெளிவாகயும் , பளிச்சென்றும் தெரியும்.
  • கண்களை சுற்றி உள்ள கருவலையங்கள் நீங்க பாலுடன் அரைத்த பாதாம் பேஸ்ட்டை சேர்த்து கண்களை சுற்றி தடவி வர வேண்டும்.

  • தினமும் கண்களை மேல், கீழ் பக்கவாட்டுகளில் அசைத்து தினமும் கண் பயிற்சி செய்தால் கண் பார்வை மேம்படும்.
  • சோர்வு மற்றும் கருவளைங்கள் நீங்க தினமும் கண்களின் மீது வெள்ளரிக்காய் துண்டுகளை 10 நிமிடம் வைத்து வர வேண்டும்.

  • சக்கரவல்லிகிழங்கு அல்லது உருளைக்கிழங்களை அரைத்து சாறை கண்கள் மீது 10 நிமிடம் மசாஜ் செய்தால் கண்களில் இருக்கும் கருவளைங்கள் நீங்கும்.
  • கண்களில் இருக்கும் கருவளைக்களை நீங்க கிரீன் டீ சிறந்ததாகும். கிருமி நாசினி தன்மைக் கொண்டு உள்ளதாள் கருவளைக்களை போக்க கிரீன் டீ உதவுகிறது.

Share This Article
Exit mobile version