அரிசியுடன் ஒப்பிடும் பொது தானியங்கள் அதிக நன்மைகளை கொண்டுள்ளது. சாமையை ஆங்கிலத்தில் லிட்டில் மில்லட் என்று அழைக்கப்படுகிறது. தினசரி ஒரு வேளை சாமையை உணவாக எடுத்து கொள்ளலாம்.
இது எல்லா வயதினருக்கும் ஏற்றவை. எளிதில் ஜீரணிக்க கூடியவை. சிறிதளவு எடுத்துகொண்டாலும் வயிறு நிரம்பிவிடும். சாமையை சோறாக மட்டும் எடுத்து கொள்ளாமல் சாமை புட்டு, சாமை ரொட்டி, சாமை பிஸ்கட், சாமை பொங்கல், சாமை உப்புமா என்று விதவிதமாக சமைக்கலாம்.
சிறுதானியமான சாமையில் இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் அதிகமாக உள்ளது. இது நார்ச்சத்து நிறைந்த உணவு, எளிய அளவு சர்க்கரை கொண்ட கார்போஹைட்ரேட் உணவு. சாமையில் வைட்டமின் பி சத்தில் நியாசின் என்னும் வைட்டமின் பி 6, ஃபோலிக் அமிலம் டிரிப்டோபென் உள்ளது.
சாமையை தினமும் ஒரு வேலை எடுத்து கொண்டால் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். சர்க்கரை நோயாளிகள் நார்ச்சத்து உள்ள சாமையை எடுத்து கொள்ளும் போது செரிமானத்தை மெதுவாக்குகிறது. இன்சுலின் சுரப்பை தூண்டி விட செய்கிறது.
தினசரி சாமை அரிசியை உட்கொள்வதால் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை தரக்கூடியது. சாமையில் புரதமும் நிறைந்துள்ளது. இதில் உள்ள புரதம் உடல் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் எலும்புகளின் வலுவுக்கு உதவுகிறது. மேலும் எலும்பு முறிவு மற்றும் எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு உதவுகிறது. தளர்ச்சியை போக்கி எலும்புகளுக்கு ஊட்டம் அளிக்கிறது.
சாமையில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் இரத்த சோகை வராமல் தடுக்கலாம். பாலூட்டும் தாய்மார்கள் சாமை அரிசியை எடுத்துகொள்ளும் போது இரத்த சோகை ஏற்படுவதை தடுக்கப்படலாம்.
இது அதிக நார்ச்சத்துக்களை உள்ளடக்கியுள்ளதால் மலச்சிக்கல் தடுப்பது மட்டுமல்லாமல் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும் உதவுகிறது.