மாங்காய் சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள்!

Selvasanshi 5 Views
2 Min Read

ஹைலைட்ஸ்:

  • உடல் எடையைக் குறைக்க மாங்காய் பெரிதும் உதவுகிறது.
  • மாங்காய் கல்லீரலுக்கு மிகவும் நல்லது.
  • நரம்பு சம்பந் தப்பட்ட பிரச்சனைகளுக்கு மாங்காய் பெரிதும் உதவுகிறது.

மாங்காய் என்ற பெயரை கேட்டாலே வாயில் எச்சில் ஊறும். அதிலும் மாங்காயுடன் மிளகாய் தூள், உப்பு சேர்த்து சாப்பிட்டால், இன்னும் சுவையாக இருக்கும். மாங்காய் சாப்பிட்டால் சூடு என்பார்கள். மாம்பழத்தை விட மாங்காயில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்து இருக்கிறது. இது பலருக்கும் தெரிவதில்லை. நாம் இப்போது மாங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம்.

குறிப்பாக உடல் எடையைக் குறைக்க மாங்காய் பெரிதும் உதவுகிறது. மாம்பழத்தில் தான் கலோரிகள் மற்றும் சர்க்கரை அதிகம் இருக்கும். மாங்காயில் கலோரிகள் இல்லை. எடையை குறைக்க விரும்புவோர் அச்சமின்றி மாங்காயை சாப்பிடலாம்.

அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் இருந்தால், மாங்காயை சாப்பிடலாம். மாங்காய் சாப்பிட்டால் அசிடிட்டி பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெறலாம்.

கர்ப்பிணி பெண்களுக்கு காலையில் மிகுந்த சோர்வும், வாந்தியும் ஏற்படும். அப்போது இவர்கள் மாங்காயை வாயில் போட்டுக் கொண்டால், அந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

மாங்காய் சாப்பிட்டால் உடலின் எனர்ஜி அதிகரிக்கும். மதிய உணவிற்கு பிறகு மாங்காய் சாப்பிட்டால், மதிய நேரத்தில் ஏற்படும் அரைத்தூக்க நிலையில் இருந்து நாம் விடுபடலாம்.

மாங்காய் கல்லீரலுக்கு மிகவும் நல்லது. மாங்காய் சாப்பிட்டால் பித்தநீர் சுரப்பு அதிகமாகும். இந்த பித்தநீர் குடலில் ஏதேனும் பாக்டீரியல் தொற்றுகள் இருந்தால் அதை சரிசெய்யும். இதனால் குடலும் சுத்தமாகும்.

மாங்காயில் வைட்டமின் சி சத்து அதிகமாக இருக்கும், இது இரத்த நாளங்களின் நீட்சித்தன்மையை அதிகரிக்கிறது. மேலும் இது புதிய இரத்தணுக்களின் உற்பத்திக்கும் உதவுகிறது.

நீரிழிவு சர்க்கரை நோய் உள்ளவர்கள் மாங்காயை தயிருடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவுவை கட்டுப்பாட்டுகுள் வைத்து கொள்ளலாம். இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

மாங்காய் சாப்பிடுவதன் மூலம், பல் ஈறுகளின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். மாங்காய் சாப்பிடுவதன் மூலம் ஈறுகளில் ஏற்படும் இரத்தக்கசிவுகளை தடுக்கலாம். இதன்முலம் வாய் துர்நாற்றத்தையும், பல் சொத்தையாவதையும் தடுக்கும்.

ஆண் பெண் ஆகிய இருபாலருக்கும் ஏற்படும் நரம்பு சம்பந் தப்பட்ட பிரச்சனைகளுக்கு மாங்காய் பெரிதும் உதவுகிறது. மேலும் மாங்காய் சருமத்தை பளபளப்பாக வைத்து கொள்வதற்கும் , முதுமை தோற்றத்தை தடுப்பதற்க்கும் உதவுகிறது.

 

Share This Article
Exit mobile version