முருங்கை கீரை உண்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

Selvasanshi 23 Views
3 Min Read

ஹைலைட்ஸ்:

  • முருங்கை மரத்தின் கீரை, பூ , காய், வேர், பட்டை ஆகிய அனைத்திலும் நிறைய சத்துக்கள் உள்ளது.
  • முருங்கை கீரையில் பாலைவிட நன்கு மடங்கு கால்சியம் உள்ளது.
  • நம் உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்க, முருங்கை கீரையை நெய் சேர்த்து வதக்கி சாப்பிட வேண்டும்.

முருங்கை கீரையில் ஏராளமான சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. முருங்கை மரத்தின் கீரை, பூ , காய், வேர், பட்டை ஆகிய அனைத்திலும் நிறைய சத்துக்கள் உள்ளது.

நம் உடலில் இரத்தணுக்களின் அளவு குறைவாக இருந்தால், முருங்கைக்கீரையை சாப்பிட்டு இயற்கையான முறையில் இதனை அதிகரிக்கலாம். மேலும் முருங்கை கீரை உண்பதால் கிடைக்கும் முக்கிய நன்மைகளை பார்ப்போம்.

கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது

கர்ப்பப்பையின் குறைகளை போக்கி கருத்தரிப்பதை உருவாக்கும். பெண்களுக்கு பிரசவத்தின் போது இரத்தம் அதிகம் வெளியேறும். அதனால் உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்க வேண்டுமானால், முருங்கைக்கீரையை நெய் சேர்த்து வதக்கி சாப்பிட வேண்டும்.

மேலும் முருங்கைக்கீரை பிரசவத்தை துரிதப்படுத்தும், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும். ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை நீக்கும்.

கண் பார்வையை அதிகரிக்கும்

முருங்கை கீரையில் வைட்டமின் எ சத்துக்கள் அதிக அளவு நிறைந்துள்ளது. 100 கிராம் முருங்கை கீரை தினமும் உண்டு வந்தால் கண் பார்வை கூர்மையாக இருக்கும், கண் பார்வை குறைபாடும் ஏற்படாது.

இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கும்

முருங்கை கீரையில் அதிக அளவில் இரும்புசத்து நிறைந்துள்ளது. இது உடம்பில் இரத்த உற்பத்தியை அதிகரிக்கிறது. மேலும் இரத்த சோகை போன்ற நோய் எற்படாமல் தடுக்க உதவுகின்றது.

முருங்கை இலைகளில் இரும்பு, சுண்ணாம்புச் சத்து, தாமிரம் ஆகியவை இருக்கின்றன. முருங்கை கீரையை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், உடம்பில் இரத்த சோகை குறையும்.

மலச்சிக்கலை தடுக்க உதவும்.

முருங்கைகீரையில் அதிக அளவில் நார்சத்து இருக்கிறது. முருங்கை கீரையை வேக வைத்து அதன் சாற்றை பருகி வந்தால் உடல் சூடு குறையும். மேலும் வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல் மற்றும் குடல் பிரச்சினை போன்ற பிரச்சினைகளை உருவாக்காமல் தடுக்கும்.

சிறுநீரகம் பலப்படும்

முருங்கை காய் உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க கூடியது. இதை உண்டால் சிறுநீரகம் பலப்படும் தாதுவும் பெருகும். இதனால் முருங்கை கீரைக்கு ‘விந்து கட்டி’ என்ற பெயரையும் வைத்திருக்கிறார்கள். முருங்கை கீரையில் மிளகு ரசம் வைத்து சாப்பிட்டால் கால், கை, உடம்பு வலிகள் நீங்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும்

வாரந்தோறும் முருங்கைக்கீரையை உணவில் சேர்த்து வந்தால், நம் உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். இதனால் எளிதில் உடலைத் தொற்றும் சளி, இரும்பல், காய்ச்சல் போன்றவற்றில் இருந்து விலகி இருக்கலாம்.

மேலும் முருங்கைக்கீரையில் உள்ள வைட்டமின் சி சத்து, சரும பராமரிப்புக்கும், முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது.

இதயத்திற்கு நல்லது

முருங்கைக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நாம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். குறிப்பாக ஆண்கள் முருங்கைக்கீரையை தவறாமல் சாப்பிட்டு வந்தால், அவர்களை எளிதில் தாக்கும் மாரடைப்பு மற்றும் இதர இதய நோய்களின் அபாயத்திலிருந்து பாதுகாக்கலாம்.

வலிமையான எலும்புகள் மற்றும் பற்கள்

முருங்கைக்கீரையில் கால்சியம் அதிக அளவு உள்ளது. இது எலும்புகள் மற்றும் பற்களின் வலுவினை அதிகரிக்க செய்கிறது. உணவில் உள்ள கால்சியம் சத்துக்களை உறிஞ்சுவதில் மெக்னீசியம் பெரும் பங்கு வகிக்கிறது.

ஞாபக திறன் அதிகரிக்கும்

முருங்கைப் பூவை நன்கு வெயிலில் உலர வைத்து, பொடி செய்து வைத்து கொள்ளயும். கண் எரிச்சல் வரும் போது அந்த பொடியை பாலில் சேர்த்து கலந்து குடித்தால் கண்கள் நன்கு குளிர்ச்சியுடன் இருக்கும். இதனால் குழந்தைகளுக்கு ஞாபக சக்தியும் பெருகும்.

முருங்கை கீரையில் பாலைவிட நன்கு மடங்கு கால்சியம் உள்ளது. மேலும் இதில் பாலாடையை விட இரண்டு மடங்கு புரோட்டின், ஆரஞ்சை விட ஏழு மடங்கு வைட்டமின் சி, வாழைப்பழத்தை விட 3 மடங்கு வைட்டமின் ஏ உள்ளது.

நாம் உடல் ஆரோக்கியத்தை காக்க, இனியாவது நாம் முருங்கைக்கீரையை சாப்பிடுவோம்.

 

Share This Article
Exit mobile version