பழங்கள் எப்பொழுதும் நமக்கு அதிக ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. அதிலும் முக்கியமான சில பழங்கள் நமது உடலில் ஏற்படும் சில முக்கிய பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வு அளிக்க கூடிய பயன்களை தருகிறது. அந்த வகையில் திராட்சை மற்றும் உலர் திராட்சையில் மனித உடலுக்கு தேவையான பல நன்மைகள் நிரம்பி உள்ளன. பச்சை திராட்சைப் பழத்தில் இருக்கும் வைட்டமின் சத்துக்களை விட, உலர் திராட்சையில் அதிக அளவு சத்துக்கள் உள்ளது.
கருப்பு, பச்சை, கோல்டன் என்று மூன்று கலர்களில் உலர் திராட்சை கிடைக்கிறது. இவற்றில் வைட்டமின் பி, சி, ஃபோலிக் அமிலம், இரும்புச்சத்து, கரோட்டீன்கள், லுடீன், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. உலர் திராட்சையை தண்ணீரில் ஊற வைத்து, அதன் பின்னர் சாப்பிட்டால் மிகச் சிறந்த பலன்களை நாம் பெறலாம்.
உலர் திராட்சையின் மருத்துவ பயன்கள் :
1. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்களுக்கு ரத்தசோகை ஏற்படும். இவர்கள் தினமும் உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை நோய் சரியாகும்.
2. உணவு செரிமானத்தை எளிதாக்க உலர் திராட்சை மிகவும் உதவுகிறது. நற்பகலில் நீங்கள் அதிக அளவில் உணவை சாப்பிட்டால், பின்னர் சிறிது உலர் திராட்சையை சாப்பிடுவது மிகவும் நல்லது.
3. உலர் திராட்சையை தினமும் உட்கொண்டால் உடல் சூடு தனித்து, உடல் எடை அதிகரிக்கும்.
4. உலர் திராட்சையில் பொட்டாசியம் அதிக அளவு உள்ளது. இந்த பொட்டாசியம் உடலில் ரத்த அழுத்தத்தை கட்டுபடுத்த உதவுகிறது.
5. மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினந்தோறும் இரண்டு முறை தொடர்ந்து உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால் நல்ல பலனை பெறலாம்.
6. ரத்தத்தை சுத்திகரிக்க உலர் திராட்சை மிகவும் உதவுகிறது.
7. மூல நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் உலர்திராட்சையை தொடர்ந்து எடுத்து கொண்டால், அந்த நோயில் இருந்து விடுபடலாம்.
8. உலர் திராட்சையில் உள்ள வைட்டமின் ஏ சத்து, கண்களின் பார்வைத்திறனை அதிகரிக்க செய்கிறது.
9. நார்ச்சத்து நிறைந்த உலர் திராட்சையை சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
10. எலும்புகள், பற்கள் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை காக்க உலர் திராட்சைப் பயன்படுகிறது.
11. தினமும் காலையில் சிறிது உலர்ந்த திராட்சையை சாப்பிட்டால் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கலாம்.
உலர் திராட்சையின் பல மருத்துவ குணங்களில் சிலவற்றை மட்டுமே மேலே குறிப்பிட்டுள்ளோம். உங்களது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உலர் திராட்சை மிகவும் நல்லது.