- Advertisement -
Homeசெய்திகள்மகளிருக்கான இலவச பயண வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது!

மகளிருக்கான இலவச பயண வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது!

- Advertisement -spot_img

ஹைலைட்ஸ்:

  • தமிழக அரசின் அனைத்து சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் “மகளிர் பயணம் செய்ய கட்டணமில்லை” என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கிறது.
  • ஓட்டுனர் பேருந்தை பேருந்து நிறுத்தத்தில் தான் நிறுத்த வேண்டும். பேருந்து நிறுத்தத்திற்கு முன்போ, தாண்டியோ நிறுத்தி பயணிகளுக்கு இடையூறு செய்யக்கூடாது.
  • வயது முதிர்ந்த பெண்கள் பயணிகளுக்கு இருக்கையில் அமர உதவி புரிய வேண்டும்.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்து கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகர, மாநகரப் பேருந்துகளில் அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும்,பேருந்து பயண அட்டை இல்லாமலும் பயணிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது.

அதன்படி கடந்த மே 8 ஆம் தேதியிலிருந்து பேருந்துகளில் கட்டணமில்லாமல் பெண்கள் பயணித்து வருகின்றார்கள். மேலும் பெண்களுக்கு குழப்பம் ஏற்படாத வகையில், தமிழக அரசின் அனைத்து சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் “மகளிர் பயணம் செய்ய கட்டணமில்லை” என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கிறது.

மேலும் தற்போது நகரம் மற்றும் மாநகர பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் செய்துவது தொடர்பாக பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை போக்குவரத்துத்துறை அரசு செயலாளர் சமயமூர்த்தி இன்று வெளியிட்டுள்ளார். அதன்படி

 

1. பயணிகள் பேருந்திற்காக நிற்கும் போது, பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும். ஒருவர் நின்றாலும் பேருந்தை நிறுத்தி ஏற்றி செல்ல வேண்டும்.

2. ஓட்டுனர் பேருந்தை பேருந்து நிறுத்தத்தில் தான் நிறுத்த வேண்டும். பேருந்து நிறுத்தத்திற்கு முன்போ, தாண்டியோ நிறுத்தி பயணிகளுக்கு இடையூறு செய்யக்கூடாது

3. நடத்துனர் வேண்டுமென்றே பேருந்தில் இடமில்லை என்று ஏறும் பெண் பயணிகளை பேருந்திலிருந்து இறங்கி விடக் கூடாது.

4. வயது முதிர்ந்த பெண்கள் பயணிகளுக்கு இருக்கையில் அமர உதவி புரிய வேண்டும்.

5. பேருந்தில் பயணம் செய்யும் பெண் பயணிகளிடம் எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ, இழிவாகவோ, ஏளனமாகவோ பேசக்கூடாது.

6. பேருந்தில் பயணம் செய்யும் பெண் பயணிகளிடம் அன்புடனும், உபசரிப்புடனும் நடந்து கொள்ள வேண்டும்.

7. பெண் பயணிகள் ஏறும்போதும், இறங்கும்போதும் கண்காணித்து ஓட்டுனருக்கு சமிக்ஞை(சிக்னல்) செய்து பாதுகாப்பாக ஏற்றி இறக்க வேண்டும்.

letter

மேலுள்ள அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது.

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img