விராபின் வைரஸ் எதிர்ப்பு மருந்து பயன்படுத்த மத்திய அரசு அனுமதி

Pradeepa 1 View
1 Min Read

ஹைலைட்ஸ் :

  • ‘விராபின்’ என்ற வைரஸ் தடுப்பு மருந்து
  • இந்த வைரஸ் தடுப்பு மருந்தை சைடஸ் கெடிலா நிறுவனம் தயாரித்துள்ளது
  • விராபின் வைரஸ் தடுப்பு மருந்தை பயன்படுத்த மத்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது.

இத்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிகமாக பாதிப்படைந்த கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டிசிவிர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. நாட்டில் ரெம்டிசிவிர் மருத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

சைடஸ் கெடிலா ஹெல்த்கேர் நிறுவனம் ‘விராபின்’ என்ற வைரஸ் தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது. ரெம்டிசிவிர் தடுப்பு மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் விராபின் வைரஸ் தடுப்பு மருந்தை பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது.

விராபின் தடுப்பு மருந்தை கொரோனா வைரஸ் தோற்று தோன்றிய உடன் செலுத்தி கொண்டார் வைரஸ் தொற்றின் தாக்கம் குறையும். கொரோனா வைரஸ் மட்டுமின்றி இதர வைரஸ் பாதிப்புகளுக்கான சிகிச்சைக்கும் இந்த மருந்து உதவும் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

விராபின் மருந்தை அவசர கால சிகிச்சைக்கு பயன்படுத்த வர்த்தக ரீதியில் விற்பனை செய்ய மத்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த தடுப்பு மருந்தை போட்டு கொண்ட 91 சதவீத கொரோனா நோயாளிகள் 7 நாட்களில் குணமடைந்து உள்ளனர் என்று ஆய்வு மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Share This Article
Exit mobile version