கருப்பு பூஞ்சை தொற்று குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு! – தமிழக அரசு

Selvasanshi 8 Views
1 Min Read

இந்தியாவில் தற்போது கொரோனாவை தொடர்ந்து மியூகோமிகோசிஸ் என்ற கருப்பு பூஞ்சை நோய் தொற்று மற்றொரு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது கொரோனாவில் இருந்து மீண்ட நோயாளிகள் கருப்பு பூஞ்சை நோயால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

‘மியூகோர்மைகோசிஸ்’ என்னும் கருப்புப் பூஞ்சை மிகவும் அபாயகரமான, அரியவகை பூஞ்சை நோய் ஆகும். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உள்ளானவர்களுக்கு அதிக அளவாக கருப்புப் பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது கருப்புப் பூஞ்சை நோய் தொற்றை கண்டறிதல், சிகிச்சை முறை குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, கருப்புப் பூஞ்சைக்கு முகம் வீக்கம், கண் கீழ் பகுதியில் வீக்கம், மூக்கடைப்பு, ஈறுகளில் புண் உள்ளிட்டவை அறிகுறிகளாக வரையறுக்கப்பட்டுள்ளது.

கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூக்கு, கண் பகுதியில் CT – PNS (சிடி-பிஎன்எஸ்) ஸ்கேன், அல்லது முகம் முழுவதும் MRI (எம்.ஆர்.ஐ.) ஸ்கேன் எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் கருப்பு பூஞ்சைத் தொற்று எந்த கட்டத்தில் உள்ளது என்பதைக் கண்டறிந்து, மருத்துவர்கள் அதற்குரிய சிகிச்சை அளிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருப்பு பூஞ்சைத் தொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியிருந்த நிலையில், தமிழக அரசு கருப்பு பூஞ்சை தொற்று குறித்த வழிகாட்டு நெறிமுறைககளை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Exit mobile version