கொரோனா தடுப்பூசி போடுவதை விரிவுபடுத்த தமிழக அரசு முடிவு

Pradeepa 2 Views
1 Min Read

தமிழக அரசு கொரோனா தடுப்பூசி போடுவதை விரிவுபடுத்த, மினி கிளினிக்குகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய தற்காலிக மருத்துவமனைகளை ஏற்படுத்த உத்தரவிட்டு உள்ளது.

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் கூடுதல் தலைமை செயலாளர், சுகாதார செயலாளர் சென்னை மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஏற்கனவே 761 மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும், தடுப்பூசி போட விரும்பும் தனியார் மருத்துவமனைகளில், இந்த வசதிகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

தடுப்பூசி டோஸ் அளவுக்கு ஏற்றவாறு, நபர்களை கண்டறிந்து தடுப்பூசி போட வேண்டும், மேலும் தடுப்பூசி மருந்து வீணாகாமல் தடுக்கவும் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டது.

நோய் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் கூடுதலாக ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்ய சென்னை மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டது.

கொரோனா தொற்று உறுதியானவர்கள் மற்றும் அவர்களோடு தொடர்பில் உள்ளவர்களை கண்டறிந்து பரிசோதனை செய்து நோய் தொற்று இருந்தால் அவர்களை தனிமைப்படுத்தி தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டது.

கொரோனா தோற்று உள்ள பகுதிகளை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும். கட்டுப்பாடு பகுதிகளை கிருமி நாசினி தொளித்து சுத்தமாக வைக்க வேண்டும்.

Share This Article
Exit mobile version