தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு

Pradeepa 2 Views
1 Min Read

சென்னை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 224 ரூபாய் அதிகரித்து மீண்டும் 35,000 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது.

ஒரு சவரன் தங்கம் 35,008 ரூபாய் ஆக உள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 28 ரூபாய் அதிகரித்து 4,376 ரூபாய் ஆக உள்ளது.

நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 296 குறைந்து ரூ 34,784-க்கு விற்க்கப்பட்டது. ஒரு கிராம் ரூ. 4,348-க்கும் விற்பனை ஆனது. இந்த நிலையில் 3 நாட்களுக்கு பிறகு தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது.

இதனால் தங்கம் ஒரு சவரன் மீண்டும் 35,000 ரூபாய்யை தாண்டிஉள்ளது. வெள்ளி கிராமுக்கு 40 காசுகள் அதிகரித்து 73 காசுகள் 80 காசுகளாக உள்ளது.

கட்டி வெள்ளி கிலோவுக்கு 400 ரூபாய் அதிகரித்து 73,800 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமையில் இருந்து தொடர்ந்து குறைந்து கொண்டே வந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Exit mobile version