ஹைலைட்ஸ்:
- தினமும் இஞ்சி தேநீர் அருந்தி வந்தால் தொண்டை கரகரப்பு நீங்கும்.
- இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும் இஞ்சி தேநீர்.
- வயிறு கோளாறு, குமட்டல், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும் இஞ்சி தேநீர்.
தினமும் ஒரு கப் இஞ்சி தேநீர் (இஞ்சி ஹெர்பல் டீ) குடித்து வந்தால் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த தேநீரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் இருக்கிறது. இந்த அமிலங்கள் நமது உடலில் புற்றுநோய் மற்றும் அலர்ஜிகள் ஏற்படுவதைத் தடுக்கிறது.
வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் அமீனோ ஆசிட்கள் இஞ்சி தேநீரில் அதிகமாக இருக்கும். இவை இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து இதயக் கோளாறு பிரச்னைககள் வராமல் தடுக்கிறது. மேலும் இது கெட்ட கொழுப்புகளையும் கரைக்கிறது. மாரடைப்பு, பக்க வாதம் போன்ற பிரச்சனைகளையும் வராமல் தடுக்கிறது.
மேலும் இது நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகரிக்கிறது. கல்லீரல் பிரச்சனைகள்,வயிறு கோளாறு, குமட்டல், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்க இஞ்சி பெரிதும் உதவுகிறது.
சளி, சைனஸ் போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு இது ஒரு அருமருந்தாக பயன்படுகிறது. தினமும் இஞ்சி தேநீர் அருந்தி வந்தால் தொண்டை கரகரப்பு, இரும்பல் ஆகியவற்றிக்கு நிவாரணம் கிடைக்கும். தொண்டையில் புண் இருந்தாலும் குணமாகிவிடும்.
இஞ்சி தேநீர் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
- தோல் நீக்கிய இஞ்ச் துண்டு 2
- சுத்தமான தண்ணீர் 3 கப்
- தேன்னும், எலுமிச்சம் பழமும் தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் மூன்று கப் தண்ணீர் எடுத்து கொண்டு கொதிக்கவைக்கவும். தண்ணீர் கொதிக்கும் போது இஞ்சியை சேர்க்கவும். பிறகு தீயை குறைத்து பாத்திரத்தை மூடி வைக்கவும். 20 நிமிடங்கள் கழித்து மூடியை . திறந்து கீழே இறக்கி பாத்திரத்தில் இருக்கும் சாற்றை வடிகட்டவும். வடி கட்டிய சாறுடன் ஒரு டேபிள் ஸ்பூன் தேன்னை சேர்க்கவும். பிறகு சிறிதளவு எலுமிச்சம் பழச்சாறையும் இதனுடன் சேர்க்கவும். இப்போது நமக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சுவையான இஞ்சி தேநீர் தயாராகிவிட்டது. இந்த தேநீரை தினமும் அருந்தினால் நாம் புத்துணரச்சியேடு இருக்கலாம்.