நல்லெண்ணெய் நன்மைகள்

sowmiya p 9 Views
3 Min Read

சருமத்துக்கு விலை உயர்ந்த க்ரீம் வகைகளையும் மாய்சுரைசர்களையும் பயன்படுத்துபவர்கள் சில காலம் அதிலிருந்து விலகி இருங்கள். அதற்கு மாற்றாக நல்லெண்ணெயை சருமத்துக்கு பயன்படுத்துங்கள்.

  • சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க க்ரீம் வகைகளை பயன்படுத்துபவர்கள் இயற்கையில் கிடைக்கும் நல்லெண்ணெயை பயன்படுத்தலாம். இதை பயன்படுத்திய சில நாட்களிலேயே பலன்களையும் பார்க்கலாம்.

​நல்லெண்ணெயில் என்ன இருக்கு:

  • நல்லெண்ணெய் வைட்டமின் ஈ அதிகம் கொண்டுள்ளது. இது சிறந்த ஆண்டி ஆக்ஸிடெண்ட் ஆக செயல்படுகிறது. நல்லெண்ணெய் க்ரீம் வகையறாக்கள், சோப்புகள், லோஷன் மற்றும் பாடி ஸ்க்ரப் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது.
  • ஆக்ஸிஜனேற்றம் அதாவது சருமத்துக்கு இலவச தீவிரமான சேதத்தை எதிர்த்து போராடுகிறது. இதில் இருக்கும் ஆன் டி மைக்ரோபியல் பண்புகள் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை அழித்து அவை தீவிரமாகாமல் தடுக்கின்றன. இதனால் சருமத்தில் வீக்கம், சிவத்தம் மற்றும் அழற்சியை குறைக்க செய்கின்றன. சருமத்துக்கு நல்லெண்ணெயை பயன்படுத்துவதன் மூலம்
  • காமோடோஜெனிக் அளவு குறைவாக இருப்பதால் இது சருமத்துளைகளை அடைக்காது. மேலும் இது சருமத்துக்கு மென்மையான மற்றும் ஒளிரும் சருமத்தை அளிக்க செய்கிறது. நல்லெண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் சருமத்துக்கு கிடைக்கும் பயன்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.

வடுக்களை போக்க செய்கிறது:

  • நல்லெண்ணெய் சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையை கட்டுப்படுத்த உதவுகிறது. முகப்பரு மற்றும் பருக்களால் வரும் வடுக்களை போக்க செய்கிறது.

எப்படி செய்யணும்

  • 1 டீஸ்பூன் நல்லெண்ணெயுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பஞ்சில் தொட்டு பருக்கள் இருக்கும் இடத்தில் தடவி ஊறவிடவும். பிறகு இதை கழுவி வந்தால் பருக்கள் குறைவதோடு தழும்புகளும் குறையும்.
  • இது சிறண்ட பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன. அதனால் முகப்பரு, பருக்கள், ப்ளாக் ஹெட்ஸ் மற்றும் வைட் ஹெட்ஸ் போன்றவற்றிலிருந்து தீர்வளிக்க செய்கிறது.

​சரும வறட்சிக்கு தீர்வளிக்கும்

  • பெரும்பான்மையோனோர் சந்திக்கும் சரும பிரச்சனையில் சரும வறட்சியும் ஒன்று. இதை தடுக்க பல்வேறு வழிகள் உண்டு அதில் ஒன்று நல்லெண்ணெய் பயன்பாடு. நல்லெண்ணெயை டோனர் வடிவில் பயன்படுத்தி வந்தால் சருமத்தின் இளமைத்தன்மை தக்கவைக்கலாம். சருமம் வறட்சி இல்லாமல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

என்ன செய்யணும்

  • நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
  • பன்னீர் – 2 டீஸ்பூன்
  • இரண்டையும் நன்றாக சேர்த்து குலுக்கி காட்டன் பஞ்சில் நனைத்து முகம், கை, கால்களில் ஸ்ப்ரே செய்து விடுங்கள் தினமும் இதை செய்து வந்தால் சருமம் வறட்சியாவதை தடுக்கலாம். இது முகத்துக்கு மட்டுமல்ல உடலில் எங்கு வறட்சி இருந்தாலும் அதை போக்க உதவக்கூடும்.

​சுருக்கங்களை போக்குகிறது

  • நல்லெண்ணெய் சருமத்துக்கு ஒரு ஈரப்பதமூட்டி. இது சருமத்தில் இருக்கும் நச்சை வெளியேற்றி சேதமடைந்த தோல் செல்களை சரி செய்கிறது. மேலும் கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் இருப்பதால் சுருக்கங்கள், நேர்த்தியான கோடுகள், சருமத்துளைகளை குறைக்கிறது.
  • நல்லெண்ணெயில் இருக்கும் பாலிபினால்கள் சருமத்தில் எண்ணெய் பளபளப்பை தடுக்கிறது. மேலும் இயற்கையாகவே சருமத்தின் பி.ஹெச் அளவை பாதுகாக்க செய்கிறது. சருமத்திலிருக்கும் அழுக்கு, எண்ணெய் மற்றும் பாக்டீரியாக்களையும் வெளியேற்றுகிறது.

​மேக்- அப் ரிமூவர்

  • மேக் அப் கலைப்பதற்கு பெரும்பாலும் ரிமூவர்கள் தான் பயன்படுத்துவார்கள். அதை தவிர்த்து மேக் அப்- கலைக்க இயற்கை வழியை விரும்பினால் அதற்கு நல்லெண்ணெய் உதவக்கூடும்.

என்ன செய்யணும்

  • மேக் அப் கலைக்க பஞ்சுருண்டையில் நல்லெண்ணெயை நனைத்து முகத்தை துடைத்து எடுங்கள். தினமும் இரவு நேரத்தில் படுக்கும் போது இப்படி செய்து வந்தால் மேக் அப் போட்டதால் உண்டாகும் விளைவுகள் இருக்காது. அதனோடு மேக் -அப் முழுமையாக நீங்கும். சருமமும் வறட்சியடையாமல் இருக்கும்.

உதடுகளுக்கு பளபளப்பு கொடுக்கும்

  • பெரும்பாலோனோர் சந்திக்கும் சரும பிரச்சனையில் உதடுகளும் ஒன்று. உதடுகள் சருமத்தை காட்டிலும் மென்மையானவை. உதடுகள் மென்மையாகவும் பொலிவாகவும் இருக்க விரும்பினால் நீங்கள் நல்லெண்ணெயை தினமும் இரவு படுக்கைக்கு செல்லும் முன் உதட்டில் தடவி கொள்ளுங்கள். இது உடனடியாக பலன் கொடுக்காது என்றாலும் நாளடைவில் உதடு பொலிவாக மாறுவதை பார்க்கலாம்.

​குதிகால் வெடிப்பை கட்டுப்படுத்தும்

  • நல்லெண்ணெயை பன்னீருடன் கலந்து நன்றாக குலுக்கி அதை கால்கள் வெடிப்பு இருக்கும் போது பயன்படுத்த வேண்டும். தினமும் இரவு நேரத்தில் இதை தடவி வர வேண்டும்.
  • மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் கால்களை வைத்திருந்து கழுவி எடுங்கள். குதிகால் வெடிப்பு படிப்படியாக குறைவதை பார்க்கலாம். இனி நல்லெண்ணயை சருமத்துக்கு பயன்படுத்தி பலன் பெறுங்கள்.
TAGGED:
Share This Article
Exit mobile version