யுடியூப்பில் அறியான்வி என்ற மொழியில் தனிப்பாடல் ஒன்று வெளியாகி ஒரு ஆண்டிற்குள்100 கோடி பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. ஹரியானா மாநிலத்தில் ஒரு கோடி பேர் மட்டுமே பேசும் அறியான்வி என்ற தனித்த எழுத்து வடிவம் இல்லாத மொழியில் 52 கஜ் கா தாமன் என்ற தனிப் பாடல் கடந்த அக்டோபர் மாதம் யூடியூப்பில் வெளியானது.
19 வயதான ரேணுகா பன்வார் என்ற இளம் பெண்கள் பாடிய இந்த பாடல் வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பாடல் வெளியான 9 மாதங்களில் நூறு கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இத்தனை கேட்டுக் ரசித்து இருக்கின்றனர். இந்த பாடலுக்கு முகேஷ் ஜாஜி என்பவர் இசையமைத்துள்ளார். இந்த பாடலின் இசை மற்றும் பாடியவரின் குரலை தாண்டி வீடியோ காட்சிகளும் கண்ணைக் கவரும் வகையில் அமைந்திருந்தது ரசிகர்களின் கவர்வதற்கு கூடுதல் காரணமாகும். இந்தியாவிலேயே தனிப்பாடல் ஒன்று 100 கோடி பார்வையாளர்களைக் கடந்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.