இராணுவத்தில் பணியாற்றி வீரமரணம் அடைந்த தமிழக வீரர்களின் வாரிசுகளுக்கு நிதியுதவி..!

Selvasanshi 2 Views
1 Min Read

இராணுவத்தில் பணியாற்றி வீரமரணம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு போர் வீரர்களின் வாரிசுகளுக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் அழைத்து ஆறுதல் தெரிவித்ததோடு, கார்கில் போராட்ட வீரர்கள் நிவாரண நிதியிலிருந்து, அவர்களது குடும்பத்தினருக்கு தலா 20 லட்சம் ரூபாயை வழங்கினார்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், சோளம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மறைந்த இராணுவ படைவீரர் N.பாலமுருகனின் தாய் குருவம்மாள் அவர்களும், கிருஷ்ணகிரி மாவட்டம், இராகிமானப் பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மறைந்த இராணுவ படைவீரர் N.சந்தோஷ்-யின் தாய் சித்ரா அவர்களும், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த இராணுவ படை அலுவலர் S.ஆனந்த்-யின் மனைவி பிரியங்காநாயர் அவர்களும், திருப்பத்தூர் மாவட்டம், காக்கங்கரை கிராமத்தைச் சேர்ந்த மறைந்த இராணுவ படைவீரர் எஸ்.சபரிநாதனின் தாய் S.மனோன்மணி அவர்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து நிவாரண நிதியைப் பெற்றுக் கொண்டார்கள்.

இந்நிகழ்வின் போது, அரசு பொதுத்துறைச் செயலாளர் முனைவர் டி.ஜகந்நாதன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Share This Article
Exit mobile version