தமிழகத்தில் வரும் 10-ம் தேதி முதல் முழு ஊரடங்கு

1 Min Read

தமிழகத்தில் வரும் 10-ம் தேதி இருந்து இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாகி கொண்டு இருக்கிறது. இதனால் தமிழகத்தில் வரும் 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை இரு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் 144 ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கட்டுப்பாடுகள்

  • டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி இல்லை.
  • தனியார் அலுவலகங்கள் செலயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • மளிகை கடை, தேனீர் கடை, இறைச்சி கடை மற்றும் காய்கறி கடைகள் மதியம் 12.00 மணி வரை மட்டுமே செய்யப்படும்.
  • ரேஷன் கடைகள் காலை 8.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை மட்டுமே செயல்படும்.
  • அரசு, தனியார் பேருந்துகள், டாக்ஸிகள், வாடகை ஆட்டோகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • வங்கிகள், காப்பிட்டு நிறுவனங்கள், ATM ஆகியவை 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியங்கள் ஆகியவை செய்யப்பட அனுமதி இல்லை.
  • சாலையோர உணவகங்கள் செல்யப்பட அனுமதி இல்லை. அனைத்து உணவகங்களிலும் பார்சல் மட்டுமே வழங்கப்படும்.
Share This Article
Exit mobile version