ஏப்ரல் 12ஆம் தேதி முதல் திருப்பதியில் இலவச தரிசனம் ரத்து

Selvasanshi 4 Views
1 Min Read
  • நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால், திருப்பதியில் வழங்கப்பட்டு வரும் சா்வ தரிசன நேர ஒதுக்கீடு டோக்கன்கள் (இலவச தரிசனம்) வரும் ஏப்ரல் 12ஆம் தேதி முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.
  • திருப்பதி எழுமலையான தரிசிக்க திருப்பதி தேவஸ்தானம் தரப்பில், கொரோனா தொற்று குறைந்த இருந்தபோது தினசரி சா்வதரிசன டோக்கன்கள் (இலவச தரிசனம்) வழங்கப்பட்டு வந்தது.
  • கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று காரணமாக நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் பேர் வரை தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தது.
  • இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியதும், கடந்த மாதம் இறுதியில், 22 ஆயிரம் டோக்கனாக குறைக்கப்பட்டது. மேலும் கடந்த வாரம் இது 15 ஆயிரமாக குறைத்தது.
  • தற்போது, நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால், திருப்பதி தேவஸ்தானம் பக்தா்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
  • இதைத்தொடர்ந்து வரும் ஏப்ரல் 12ஆம் தேதி (திங்கட்கிழமை) முதல் சா்வதரிசன நேர ஒதுக்கீடு டோக்கன்களை ரத்து செய்துவதாக திருப்தி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
  • சமீபத்தில் மகாராஷ்டிராவில், ஷீரடி கோயில் தேவஸ்தானம், ஷீரடி கோவில் தரிசனத்தை ரத்து செய்ததைத் தொடர்ந்து, திருப்பதி தேவஸ்தானம் இந்த முடிவை மேற்கொண்டுள்ளது.
Share This Article
Exit mobile version