“தீனி” படம் ட்டெய்லர் வெளியீடு…..

Selvasanshi 1 View
1 Min Read

“சூது கவ்வும்” படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் அசோக் செல்வனின் தீனி படத்தின் ட்டெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு இவர் நடித்த ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் மக்களுக்கிடையே பெரும்வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து ‘தீனி’ திரைபட ட்டெய்லர் வெளியாகியுள்ளது . இப்படத்தில் அசோக் செல்வனுடன் நடிகைகள் ரீத்து வர்மா, நித்யா மேனன்,நாசர் ஆகியோர் நடித்துள்ளார்கள். இப்படத்தை அனி.ஐ.வி.சசி இயக்கி உள்ளார். இப்படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார். இவர் மலையாளத்தில் ‘ பிரேமம்’ படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

திவாகர் மணி ஒளிப்பதிவில் இப்படத்தின் ட்ரெய்லர் இன்று (05.02.2021) வெளியாகியுள்ளது.இப்படத்தின் ட்ரெய்லரை தனுஷ் தனது ட்விட்டரில் வெளியிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் காமெடியும் , ஆழமான காதலும் இருப்பதாக கூறப்படுகிறது .அசோக் செல்வன் உடல் பருமனான, வித்தியாசமான கதாபாத்திரத்திலும் ,சமையலை ஒட்டிய காட்சிகளிலும் பின்னிப்பிணைந்து இருக்கிறார் என எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.

Share This Article
Exit mobile version