கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்க உதவும் நாட்டு மருந்துகள்

Vijaykumar 3 Views
2 Min Read

கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில்  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லச்சத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. நேற்று ஒரேநாளில் 15,684 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் 94பேர் இந்த வைரசால் உயிரிழந்தனர்.

இதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,651ஆக உயர்ந்துள்ளது. இதனால் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள், மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தேசிய சித்த நிறுவனத்தின் இணை பேராசிரியர் மருத்துவர் ச.சிவகுமார்.கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து தப்பிக்க ஊறவைத்த கடுக்காய் நீர், சீந்தில் பால், ஆயுஷ் குடிநீர், தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் , இஞ்சி கற்பம், துளசி நீர் ஆகிய 6 சித்த மருந்துகளை தினமும் உட்கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.

கடுக்காயில் உள்ள கொட்டையை நீக்கி பின் அதை அரைத்து ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் கடுக்காய் என்ற விகிதத்தில் பொடியாக்கி ஊறவைக்கவும். 24 மணி நேரம் கடுக்காய் தண்ணீருடன் சேர்ந்து நன்கு ஊறிய பிறகு அதை நாம் குடித்தால் எந்த ஒரு கிருமியும் நம்மை அண்டாது.

நாட்டுமருத்துவத்தின் பயன்கள்

  • பாலில், சீந்தில் தண்டு 50 கிராம் எடுத்துக்கொண்டு அதை இடித்து பின் கொதிக்க வைத்து வடிகட்டி பருகி வந்தால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.

  • சுக்கு, மிளகு ,லவங்கம், துளசி ஆகியவற்றை ஒன்றாக இடித்து நீரில் இட்டு கொதிக்கவைத்து அதை நன்றாக வடிகட்டியாப்பின் பருககிவந்தால் உடலில் உள்ள கேட்ட சளிகள் நீங்கும்.
  • நெல்லிக்காயில் உள்ள கொட்டை நீக்கி நறுக்கி தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வரலாம். இது உடலுக்கு சக்தியை அளிக்கும்.

  • இஞ்சியின் தோல் நீக்கி சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி கொண்டு, நெய் சேர்த்து வதக்கி பின்பு அதை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டு வருவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
  • துளசியை தண்ணீரில் போட்டு அதை குடித்து வர கொரோனா வைரஸ் அண்டாமல் தப்பித்துவிடலாம்.
  • அத்துடன் ஆவி பிடித்தல், மஞ்சள் உப்பு கலந்த நீரில் வாய் கொப்பளித்தல், கபசுரக் குடிநீர் பருகுதல், சத்தான உணவுகளை உண்ணுதல் மூலம் நாம் கொரோனா தொற்றில் இருந்து எளிதாக நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியும்.

Share This Article
Exit mobile version