அதானி நிறுவனத்துடன் கை கோர்க்கும் ஃப்ளிப்கார்ட்

Selvasanshi 8 Views
1 Min Read
  • ஃப்ளிப்கார்ட் தனது பொருட்களைக் குறித்த நேரத்தில் வாடிக்கையாளர்களிடம் சேர்க்க அதானி நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
  • ஃப்ளிப்கார்ட் உலகின் மிகப்பெரிய இ மாகர்ஸ் நிறுவனமான விளங்குகிறது. தற்போது இந்தியாவில் ஃப்ளிப்கார்ட் நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்த நிறுவனத்துக்கு பல லட்சக்கணக்கில் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.
  • இந்நிறுவனம் அனைத்து வகையான பொருட்களையும், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பொருட்களையும் வர்த்தகம் செய்து வருகிறது.
  • தற்போது அதானி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்துடன் ஃப்ளிப்கார்ட் கை கோர்த்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்தில் தங்கள் பொருட்களைக் கொண்டு சேர்க்க அதானி நிறுவனத்துடன் இணைந்துள்ளதாக ஃப்ளிப்கார்ட் நிறுவனம் கூறியுள்ளது.
  • இதற்காக மும்பையில் 5,34,000 சதுர அடியில் ஒரு சரக்கு முனையம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதனால் மேற்கு இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்குப் பொருட்களை வழங்க இந்நிறுவனம் உத்தேசித்து இருக்கிறது.
  • இந்த சரக்கு முனையம் வரும் 2022 ஆம் ஆண்டு மூன்றாம் நிதியாண்டு காலாண்டில் செயல்பட இருக்கிறது.
  • மேலும் அதானி கனெக்ஸ் பி லிமிடெட் டேட்டா சேவை நிலையமும் சென்னையில் தொடங்கப்பட உள்ளது. மேலும் இந்த இரு நிறுவனங்களும் ரியல் எஸ்டேட், போக்குவரத்து, பசுமை எரிவாயு ஆகிய துறைகளிலும் இணைந்து செயல்பட உள்ளதாக தெரிவித்து உள்ளார்கள்.
Share This Article
Exit mobile version