ஆளி விதை பயன்கள் | Benefits of Flax Seeds in Tamil

Ishwarya 13 Views
2 Min Read

ஆளி விதையில் பல்வேறு சுகாதார நன்மைகள் உள்ளன. இதிலுள்ள நன்மைகளைப் பற்றி பெரும்பாலான மக்கள் அறிந்திருக்கவில்லை. ஆளி விதையில் அதிக அளவு ஒமேகா-3 அமிலங்கள் நிறைந்துள்ளன. இது நமது உடலுக்கு அத்தியாவசியமான ஒரு கொழுப்பு அமிலம் ஆகும்.

உடல் எடையை குறைக்க

  • ஆளி விதையில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது இதை சரியான அளவு எடுத்துக்கொண்டால் அதிகளவு பசி எடுக்காது
  • உடல் எடையை கச்சிதமாக வைத்துக் கொள்ள இந்த ஆளி விதை உதவுகிறது.
  • இதில் இருக்கும் நார் சத்தானது உடலில் கெட்ட கொழுப்பு சேராத தடுத்து பக்கவாதம், இதயநோய் வராமல் தடுக்கின்றது.
  • இதில் 20% புரதச் சத்து இருப்பதால் உடல் உடல் எடையை சீக்கிரமாய் குறைக்கிறது.
  • இதில் கொழுப்பு அமிலம் மற்றும் ஒமேகா-3 நிறைந்துள்ளது..

பெண்களுக்கு பிரச்சனை மட்டும் முடி பிரச்சனையை தீர்க்கிறது

பெண்களுக்கு ஹார்மோன் குறைபாடால் ஏற்படும் பிரச்சினைகள் உயர் ரத்த அழுத்தம், முடி உதிர்வு மன உளைச்சல் போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாக இந்த ஆளிவிதை உதவுகிறது .
இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முடி உதிர்வை தடுக்கும் முடி வளர உதவும் பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வயிற்றுவலி பதற்றம் தலைவலி போன்றவற்றை கட்டுப்படுத்தும்.
ஒழுங்கற்ற மாதவிடாய் கோளாறுகளை சரி செய்யும்.

புற்றுநோய்க்கு மருந்தாகும் ஆளிவிதை

பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வராமல் ஆளிவிதை தடுக்கின்றது. கர்ப்பப்பை செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
ஆளி விதை ஆனது புற்றுநோய்களுக்கு எதிரான விஷயங்களை கொண்டிருக்கின்றன இதில் ஒமேகா-3 போன்ற சத்துக்கள் இருப்பதால் புற்றுநோய்க்கு எதிராக செயல்படுகின்றது.
மார்பக புற்றுநோய் மற்றும் குடல் புற்று நோயில் இருந்து பாதுகாக்கும்

கண் எரிச்சலுக்கு ஆளிவிதை

ஆளி விதையை பொடியாக்கிய சுத்தமான தண்ணீரில் ஊறவைத்து அது குழம்பு ஆய்டும்.
அப்புறம் அதை எடுத்து வடிகட்டி கண்ணில் விட்டோம் என்றால் கண்ணெரிச்சல், கண்சிவப்பு மாறிவிடும். ஆளி விதையை தண்ணீரில் ஊறவைத்து அதன் பிறகு தினமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நன்மை பயக்கும்.

ஆளி விதையை சாப்பிடும் போது கவனிக்க வேண்டியவை

  • ஆளி விதையானது அதிக நார்ச்சத்து கொண்டதால் இதை ஒரேயடியாக உணவில் சேர்த்து சாப்பிடக்கூடாது கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • இது சாப்பிடும் நாட்கள் அதிகமாக தண்ணீரை பருக வேண்டும்.
  • இல்லையென்றால் மலச்சிக்கல்,வாயு மாதிரியான உபாதைகள் ஏற்படும்.
  • கர்ப்பம் காலத்தில் ஆரம்ப காலத்தில் இருக்கும் பெண்கள் இதை உட்கொள்வது தவிர்க்க வேண்டும்.
Share This Article
Exit mobile version