Contact Information

Theodore Lowe, Ap #867-859
Sit Rd, Azusa New York

We Are Available 24/ 7. Call Now.

நமது சுவாசத்தில் நுரையீரல்(lungs) முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் நுரையிரலை நாம் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். நுரையீரலின் வேலை, ஆக்ஸிஜனை வடிகட்டி பிறகு அந்த ஆக்சிஜனை முழு உடலையும் சென்றடைய செய்கிறது. உடலுக்குத் தேவையான உயிர்காற்றை வழங்கும் பணியை மேற்கொள்ளும் இந்த நுரையிரலை ஆரோக்கியமாக வைத்திருக்க ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது மிகவும் அவசியம் என்று உணவு நிபுணர்கள் கூறுகின்றனர்.

நுரையீரலை நீண்டகாலத்திற்கு ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டுமென்றால், நம் உணவு மற்றும் வாழ்க்கை முறையை மேம்படுத்துவது மிகவும் முக்கியம். கொரோனா வைரஸ் முதலில் நுரையீரலை தான் குறிவைக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த வைரஸ் தாக்கத்தால் நுரையீரல் குறுகி மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் நாம் ஆரோக்கியமாக உணவுகளை உட்கொண்டு நுரையீரலை பாதுகாப்போம்.

நுரையீரலை பலவீனமாக்கும் சில உணவுவகைகளை நாம் தவிர்ப்பது மிகவும் நல்லது. புகைபிடித்தல் மற்றும் புகையிலை தவிர, பதப்படுத்தப்பட்ட இறைச்சி, சர்க்கரை கலந்த பானங்கள் மற்றும் அதிகப்படியான ஆல்கஹால் குடிப்பதால் நுரையீரல் சேதமடைகிறது. எனவே இவற்றை எல்லாம் உட்கொள்ள வேண்டாம்.

நுரையீரல் சேதப்படுத்தும் உணவுகள்

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்

நைட்ரைட் என்ற தனிமத்தை பயன்படுத்தி இறைச்சியைப் பாதுகாக்கிறார்கள். இந்த தனிமம் நுரையீரலில் வீக்கம் மற்றும் பதற்றத்தை ஏற்படுத்தும். அதனால் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை உட்கொள்ள வேண்டாம்.

மது அருந்துதல்

உங்கள் உடலின் எதிரி ஆல்கஹால் தான். இது நுரையீரலுக்கு அதிக அளவு தீங்கை விளைவிக்கிறது. ஆல்கஹாலில் உள்ள சல்பைட்டுகள் ஆஸ்துமாவின் அறிகுறிகளை மோசமாக்கும் மற்றும் ஆல்கஹாலில் உள்ள எத்தனால், நுரையீரலை சேதப்படுத்தவும் செய்கிறது.

உப்பு

உப்பு ஆரோக்கியத்திற்கு இன்றியமையாததாக விளங்குகிறது. ஆனால் அதை அதிகமாக உட்கொண்டால், நுரையீரல் பிரச்சனைகள் உருவாகும். எனவே உணவில் உப்பைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் நுரையீரல் ஆரோக்கியமாக இருக்கும் என்று உணவு நிபுணர் டாக்டர் ரஞ்சனா சிங் கூறியிருக்கிறார்.

சர்க்கரை கலந்த பானங்கள்

நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்றால் சர்க்கரை பானங்களை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சர்க்கரையை தொடர்ந்து சாப்பிடுவதால் மூச்சுக்குழாய் அழற்சி ஏற்படும் அதனால் சர்க்கரை பயன்படுத்துவதை குறைத்து கொள்ளுங்கள். சர்க்கரை பானங்களுக்கு பதிலாக, அதிக அளவு தண்ணீர் குடிக்கலாம்.

பால் பொருட்கள்

பால், தயிர் மற்றும் பாலாடைக்கட்டி போன்ற பால் பொருட்கள் நம் உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்றாலும், அவற்றை அதிகமாக உட்கொண்டால், அவை நுரையீரலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே, பால் பொருட்களை ஒரு அளவிற்கு மேல் உட்கொள்ள வேண்டாம்.

Share: