பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு வெளியீடு ‘சூரி – வெற்றிமாறன் – விஜய் சேதுபதி’ இணையும் படத்தின்

Vijaykumar 5 Views
1 Min Read

ஹைலைட்ஸ் :

  • சூரி நடிக்கவிருக்கும் படத்தின் தலைப்பு வெளியீடு.
  • விடுதலை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டனர்.
  • சூரி நடிக்கும் படத்தில்,மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வரும் வெற்றிமாறன் அடுத்தகட்டமாக காமெடி நடிகர் சூரியை வைத்து ஒரு படம் இயக்கிவருகிறார்.

இப்படமானது எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கின்ற சிறுகதையை படத்தின் மையமாக வைத்து தயாரித்து வருகின்றனர்.

இப்படத்தில் சூரிக்கு துணை நடிகையாக பவாணி ஸ்ரீ நடித்துவருகிறார்.பிரபல நடிகர்,மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

இப்படத்தின் இசை அமைப்பாளராக, பிரபல இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார்.இப்படத்தை எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.

இந்நிலையில், இந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘விடுதலை’ என்ற பெயரும் வைத்துள்ளனர். இப்படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் வாத்தியார் என்றும் பேசப்பட்டுவருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு தளமாக சத்தியமங்கலத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியில், மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு அற்ற இடத்தில் படம் எடுக்கப்பட்டு வருகிறது. வெற்றிமாறன், விஜய்சேதுபதி, சூரி, பவானிஶ்ரீ உள்ளிட்ட மொத்த படகுழுவினரும் அங்கேயே குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்தி, தங்கி படப்பிடிப்பை நடத்திவருகின்றனர்.

விடுதலை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

இந்தப்படத்தை வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். சண்டைப்பயிற்சி இயக்குனராக பீட்டர் ஹெய்ன் என்பவரும் கலை இயக்குனராக , ஜாக்கியயும் பணியாற்றிவருகின்றனர்.

தமிழில் தயாராகவிருக்கும் இந்த படத்தை, பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளனர். கடந்த 1986ம் ஆண்டு விடுதலை என்ற பெயரில் ஏற்கனவே சிவாஜி, ரஜினி நடிப்பில் ஒரு படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Exit mobile version