- Advertisement -
Homeசெய்திகள்வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே வந்தால் ரூ.2,000 அபராதம்!

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே வந்தால் ரூ.2,000 அபராதம்!

- Advertisement -spot_img

ஹைலைட்ஸ் :

  • தமிழகத்தில் குறிப்பாக சென்னை, கோவை, திருச்சி ஆகிய இடங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது.
  • சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்கள் முதல் முறை வெளியே வந்தால் 2 ஆயிரம் ரூபாய் அபராதம்.
  • இரண்டாம் முறை வெளியே வந்தால் பாதுகாப்பு மையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் குறிப்பாக சென்னை, கோவை, திருச்சி ஆகிய இடங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

தற்போது சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தில் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்களும், அவர்களது குடும்பத்தில் உள்ளவர்களும் வீட்டை விட்டு வெளியே வந்தால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு கொரோனா பாதுகாப்பு மையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் முதல் முறை வெளியே வந்தால் அவர்களுக்கு ரூ. 2000 அபராதம் விதிக்கப்படும் எனவும், இரண்டாம் முறை வெளியே வந்தால் பாதுகாப்பு மையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது குறித்து அருகில் வசிப்பவர்கள் 044- 25384520 என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img