- இந்தியாவில் தங்களது சேவைகளை நிறுத்திக் கொள்ளப்போவதாக அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வங்கியான ‘சிட்டி பேங்க்’ தெரிவித்துள்ளது.
- மேலும் சீனா, மலேசியா, பஹ்ரைன், ஆஸ்திரேலியா, ரஷ்யா, இந்தோனேசியா , போலந்து, பிலிப்பைன்ஸ் , வியட்நாம், கொரியா, தாய்லாந்து மற்றும் தைவான் ஆகிய நாடுகளிலும் வங்கி சேவைகளை நிறுத்தப்போவதாக சிட்டி பேங்க் தெரிவித்து இருக்கிறது.
- அமெரிக்காவின் மூன்றாவது பெரியவங்கி ‘சிட்டி பேங்க்’ குழுமம் ஆகும். இந்த வங்கி இந்தியாவில் செயல்பட்டு வருகிறது.
- இந்த வங்கியில் 12 லட்சம் வங்கி சேவை பெறுவோர்கள் இருக்கிறார்கள். மேலும் இந்த வங்கியில் 22 லட்சம் கிரெடிட் கார்டுதாரர்கள், சுமார் 29 லட்சம் சில்லறை வாடிக்கையாளர்கள் உள்ளார்கள்.
- இந்தியாவில் 35 கிளைகளுடன் சுமார் 4000 ஊழியர்களுடன் சிட்டி பேங்க் இயங்கி வருகிறது.
- தற்போது இந்தியாவில் தங்களது சேவைகளை நிறுத்திக் கொள்ளப்போவதாக ‘சிட்டி பேங்க்’ தெரிவித்து இருக்கிறது.
- இந்நிலையில் சிட்டி பேங்க் குழுமம் அமெரிக்காவை தவிர்த்து லண்டன்,சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளின் சந்தைகளில் மட்டும் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது .
- நாங்கள் வெளியேற மட்டும் தான் செய்கிறோம், சேவைகளை நிறுத்தப்போவதில்லை என்று சிட்டி பேங்க் கூறியுள்ளது.
- இதனால் இந்தியாவில் உள்ள தங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பாதிப்பு இல்லை எனவும் தெரிவித்து இருக்கிறது.
- இந்த கூற்றின்படி, சிட்டி பேங்க் வேறு யாரிடமாவது வங்கியை விற்கும் என தெரிகிறது.
- சிட்டி பேங்க் இந்தியாவை விட்டு வெளியேற உள்ளோம் என்று கூறினாலும், எப்போது வெளியேறப்போகிறார்கள் என்று கூறவில்லை.