தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்க்கான கால அவகாசம் நீட்டிப்பு

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு தமிழகத்தில் மே 10 ஆம் தேதி 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு ஏற்படும் இடையூறு காரணமாக தமிழக அரசு மின் கட்டணம் செலுத்த மே 31 ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்துள்ளது.

தாழ்வழுத்த மின்நுகர்வோர்களின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகை செலுத்துவதற்கான கடைசி நாள் 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை இருந்தால் எந்தவொரு தாமதமான கட்டணமின்றி அதனை கட்டுவதற்கான கால அவகாசம் வருகிற 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

மே 31 வரை மீன் இணைப்பு சேவைகளைத் துண்டிக்க வேண்டாம் என்று tangedco ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

EB BILL

spot_img

More from this stream

Recomended