சிவகாசி அருகே மீண்டும் பட்டாசு ஆலையில் வெடி விபத்து

Selvasanshi 2 Views
1 Min Read

சிவகாசி அருகே அப்பையநாயக்கன்பட்டியில் இருக்கும் பட்டாசு ஆலையில் இன்று பிற்பகல் வெடி விபத்து ஏற்பட்டுயுள்ளது. இந்த வெடி விபத்தில் ஒரு தொழிலாளி உயிரிழந்துள்ளார்.

மேலும் பட்டாசு ஆலை வெடி விபத்தில் வேறு யாரவது சிக்கி உள்ளார்களா என தேடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளார்கள்.

வெடி விபத்து குறித்து நடந்த முதற்கட்ட விசாரணையில் இந்த பட்டாசு ஆலை ஆனந்த் என்பவருக்கு சொந்தமானது என்று தெரியவந்துள்ளது. வெயில் காலம் என்பதால் இந்த வெடி விபத்து நிகழ்ந்ததாக தொழிலாளர்கள் கூறுகிறார்கள். இந்த பட்டாசு ஆலைக்குள் தொழிலாளர்கள் சிக்கியுள்ளதால் அங்கு பதற்றம் நிலவிவருகிறது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியின் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த ஒன்றரை மாதத்தில் நிகழ்ந்த வெடி விபத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது.

கடந்த பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் உள்ள மாரியம்மாள் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 25 பேர் உயிரிழந்தார்கள். நிறைய பேர் படுகாயங்களுடன் இன்னும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதைத்தொடர்ந்து அடுத்த சில தினங்களில் நிகழ்ந்த மற்றொரு வெடி விபத்தில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்தார்கள்.

இன்று பிற்பகல் அப்பையநாயக்கன் பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளர் ஒருவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

மேலும் இந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் வேறு யாரவது சிக்கியுள்ளார்களா என தேடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளார்கள்.

Share This Article
Exit mobile version