எருக்கன் செடி பயன்

sowmiya p 8 Views
7 Min Read

எருக்கன் செடி பயன்கள் erukkanchedi benefits in tamil எருக்கன் செடி மனித சஞ்சாரம் இல்லாத ஒதுக்குப் புறங்களில் வளர்ந்திருக்கும். இது தானாகவே வளரும். இதில் இரண்டு வகை உண்டு. வெள்ளை எருக்கன் பூக்களைக் கொடுக்கும். மற்றொன்றுவாதா நிறமுடைய பூக்களைக் கொடுக்கும்.

எருக்கன் செடி பயன்கள் – erukkanchedi benefits in tamil:-

  • எருக்கம் பட்டையைக் கொண்டு வந்து உலர்த்தி நன்றாக இடித்துக் தூள் செய்து அதன் எடைக்குச் சமமாக பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்ளவும்.
  • இதில் ஒரு சிட்டிகை எடுத்து காலை, மாலை சப்பிட்டு வந்தால் பலஹீனமாக உள்ள உடல் தேறும்.
  • எருக்கன் இலைச் சாறை மிகவும் எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும். இதன் இலைச்சாறு குடலின் அழற்சியையும், நமைச்சலையும், வாந்தியையும் ஏற்படுத்தக் கூடியதாகும்.

தாது விருத்திக்கு மாத்திரை:-

  • தாது விருத்தி மாத்திரைக்கு வெள்ளெருக்கன் பூவை அதிகமாகச் சேர்த்துத் தயாரித்துப் பயன்படுத்தினால் நல்ல பலனைப் பெறலாம்.
  • எருக்கன் பூ 125 கொண்டு வந்து நிழலில் உலர்த்திக் கொண்டு சாதிப்பத்திரி, சாதிக்காய், லவங்கம் ஆகியவற்றை வகைக்கு 15 கிராம் சேர்த்து பன்னீர்விட்டு மெழுகாக அரைத்து எடுத்துக் கொண்டு சிறுசிறு மாத்திரைகளாகச் செய்து பத்திரப்படுத்திக் கொள்ளவும்.
  • இம்மாத்திரைகளிலிருந்து ஒன்று எடுத்து காலையில் மட்டும் பாலோடு சேர்த்துச் சாப்பிடவும். இதுபோன்று தொடர்ந்து சாப்பிட்டால் தாது விருத்தி ஏற்பட்டு உடல் உறுதிபெறம்

பாம்புக்கடி விஷம் இறங்க:-

  • எதிர்பாராமல் பாம்பு கடித்து விஷம் ஏறினால் உடனடியாக எருக்கன் செடியின் இளம் இலைகள் இரண்டு அல்லது மூன்று கொண்டு வந்து கடிக்கு உட்பட்டவர்கள் மென்று தின்றால் விஷம் இறங்கும்.

ஆரம்ப கால குஷ்ட நோய் அகல:-

  • குஷ்ட நோயை ஆரம்பக் காலத்திலேயே அறிந்து கொண்டால் எருக்கம்பூ குணமாக்கிவிடும்.
  • கொஞ்சம் எருக்கம் பூக்களைக் கொண்டுவந்து சுத்தம் பார்த்து நிழலில் நன்றாக உலர்த்தி அதனை இடித்து தூளாக்கிக் கொண்டு பத்திரப் படுத்திக் கொள்ளவும்.
  • அதில் ஒரு குன்றிமணி அளவு எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்துத் தினசரி சாப்பிடவும். இதுபோன்று தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பூரணமாக குணமாகிவிடும்.

எருக்கின் தன்மைகள்:

  • பொதுவாக எருக்கு பேதியாகச் செய்யும். வாதம், குட்டம், அரிப்பு. நஞ்சு, விரணம், மண்ணீரல் வீக குன்மம், கபம், பெருவயிறு முதலிய நோய்களைப் போக்கும் எருக்கன் செடி பயன்கள்
  • இலேசானவை, கடராக்னியை வளர்க்கும், விந்துவை மிகுதியாக்கும் சுவையின்மை, முகத்தில் மடிப்புகள் தோன்றுதல், இருமல், இழுப்பு எனும் நோய்களைப் போக்கும். சிவப்பு நிற எருக்கமலர் இனிப்பு கசப்புச் சுவைகள் கொண்டிருக்கும். குன்மம், வீக்கம், குட்டம், கிருமி, கபம், நஞ்சு, ரத்தபித்தம் என்னும் நோய்களைப் போக்கும்.

எருக்கன் வேர்ப்பட்டை:

  • கார்ப்பு கசப்புச் சுவைகளும், உஷ்ணத் தன்மையும் கொண்டதாகும். உடலில் வியர்வையை மிகுதியாகத் தோற்றுவிக்கும். பித்தத்தை வெளியேற்றும். ரஸாயனப் பொருள்களில் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
  • ரத்த தோஷம், குட்டம், எப்லிஸ் என்னும் பால்வினை நோய் என்பனவற்றைத் தீர்ப்பதில் இது சிறந்த மருந்தாகும். வயிற்றில் தோன்றும் கட்டி, மண்ணீரல் வீக்கம், பெருவயிறு போன்றவற்றிற்கும் இது சிறந்த மருந்தாகும் எருக்கன் செடி பயன்கள் erukkanchedi benefits in tamil.

எருக்கன் செடி பயன்கள்:

  • எருககம் வேர்த்தூள் அல்லது கஷாயம் மிகவும் உஷ்ணத்தைத் தோற்று விக்கும். விரணம், ஸ்ப்லிஸ் என்னும் பால்வினை நோய், குட்டம், வாதம், குன்மம், பெருவயிறு, பக்கவாதம், மூர்ச்சை, நஞ்சு முதலியவற்றைப் போக்கும்.
  • ரசபஸ்பம் அரை கோதுமை எடை, சுரமாக்கல் பஸ்பம் 3 கோதுமை எடை, 10 கோதுமை எடை எருக்கம் வேர்த்தூள் கலந்து மாத்தரைகளாகச் செய்து 8 மணி நேரத்திற்கு ஒரு மாத்திரை வீதம் 5 நட்கள் உட்கொண்டால் யானைக்கால் நோய் தணியும்.
  • எருக்கன் இலைகளின் மேல் படிந்துள்ள மாவைப் போன்ற வெண் துகளைக் கீறி எடுத்து எருக்கம் பால் சேர்த்து கழற்சிக்காய் அளவு மாத்திரை செய்து வெற்றிலையில் வைத்து நன்குமென்று தின்றால் பாம்பு விஷம் நீங்கும். உடல் மரத்துப் போகும் வரை அரை மணிக்கு ஒரு மாத்தரை வீதம் உட்கொள்ளவும். எந்த நிலையிலும் 9 மாத்திரைகளுக்கு மேல் விழுங்க வேண்டாம். மருந்து உட்கொள்ளும் வலிமை இல்லாவிடில் நீரில் கரைத்துப் பருகச் செய்யலாம். நஞ்சின் வேகம் தணிந்ததும் பேதியாகச் செய்து கொண்டு இலேசான உணவு உட்கொள்ள வேண்டும்.
  • பாம்பு கடித்ததும் இரண்டு மூன்று எருக்கன் இலைகளைமென்று தின்றால் நஞ்சு தணியும். இதன் வேரைச் சுத்தம் செய்து சந்தனம் போல் அரைத்துக் கடிபட்ட இடத்தில் பூசுதல், கண்களில் மைபோல இடுதல் நலம் தரும்.
  • எருக்கன் இலைகளின் மேல் ஆமணக்கு எண்ணெய் தடவி சூடாக்கி இதனால் ஒற்றடம் கொடுத்தால் ஆமவாத வலி, வாதத்தால் தோன்றும் கட்டி நீங்கும். மூட்டுவலி தணியும்.
    பழுத்த எருக்கன் இலைகளை நெருப்பில் வாட்டி சாறு பிழிந்து சில சொட்டுகள் காதில் விட்டால் வலி, சீழ் ஒழுகுதல் நிற்கும்.
  • இலைகளில் ஆமணக்கு எண்ணெய் தடவி சூடாக்கி ஆஸனவாயில் வைத்துக் கட்டினால் மூல நோய் முளை நீங்கும்.
  • எருக்கன் காய்த்தூள் 12 கோதுமை எடை, 12 மிளகு இவ்விரண்டையும் மைய தூளாக்கி உட்கொண்டால் சோகை (பாண்டு நோய்) தணியும். இதை உட்கொள்ளும்போது பாலைத் திரிய வைத்து அந்நீரில் சிறிதளவு கரு உப்பு கலந்து உட்கொள்ள வேண்டும். 7 நாட்களில் நோய் தணியும்.
  • எருக்கம்பாலைப் பூசினால் வாதத்தால் தோன்றும் வலி நீங்கும். எருக்கம்பாலைவலியுள்ள பல்லின் மேல் பூசினால் வலி தணியும்.
  • எருக்கம் பாலைப் பூசினால் கட்டிகள் விரைவில் ஆறும்.
  • எருக்கம் பாலை உலர்த்தித் தூள்செய்து பயன் படுத்தினால் குட்டம், ஸ்ப்லிஸ் என்னும் பால்வினை நோய், பெருவயிறு, விஷக்காய்ச்சல், தோல் நோய் ஆகியவற்றைத் தணிக்கும்.
  • எருக்கமலர்கள் ஒரு பங்கு, பாதி அளவு மிளகு கலந்து அரைத்து மாத்திரைகளாக்கி உட்கொண்டால் உப்புசம், கால்கை வலி, மூர்ச்சை என்பன தணியும்.
  • உலர்ந்த எருக்க மலர்த்தூள் ஒரு மணிக்கு ஒரு முறை 3 கோதுமை எடை உட்கொண்டால் காலராதணியும்.

எருக்கன் இலை பயன்கள்:

  • எருக்கன் இலை எருக்கனில் நீள எருக்கன், வெள்ளெருக்கன் என இருவகை உண்டு. பாம்புக் கடியுண்டவர் உடனடியாக எருக்கன் இலைகள் சிலவற்றை பறித்து வாயில் போட்டு மென்று தின்றால் விஷமுறிவு ஏற்படும். இல்லையேல் இலைகளை அரைத்து விழுதாக்கி அதில் ஒரு புன்னைக் காய் அளவு எடுத்து உட்கொண்டாலும் விஷ முறிவு ஏற்படும்.

எலி கடிக்கு:-

  • தேன் மற்றும் எலிக் கடிக்கு இலைகளின் விழுதை ஒரு கண்டைக்காய் அளவு விழுங்குவதோடு, கடிவாயில் அரைத்த விழுதை வைத்துக் கட்டிவிட வேண்டும். விஷம் இறங்கி குடைச்சல் நின்று போகும். இதுவே எலிக் தாயானால், நெல்லிக்காய் அளவு விழுதை உட்கொண்டு, கடிவாயில் விழுதைக் கட்டவும் வேண்டும்.
  • குதிகாளான் என்பது சாலையில் நடக்கும் போது கண்ணாடித் துண்டுகளோ. முள்ளோ அல்லது கற்களோ குத்திப் புண்ணாகி இரத்தம் கட்டிப் புரையோடிப் போகுவது ஆகும். இதனை அறுவை சிகிச்சையின்றி எருக்கன் இலையைப் பயன்படுத்தி எளிதில் குணமாக்கலாம். தொடக்கத்தில் வலி ஏற்பட்டவுடனேயே சிகிச்சை மேற்கொள்வது நல்ல பலனளிக்கும்.

வீக்கம் குறைய:-

  • மஞ்சள் நிறமடைந்த பழுத்த எருக்கன் இலைகளை சேகரித்துக் கொள்ள வேண்டும். முழுமையான செங்கல் ஒன்றினை அடுப்பில் போட்டு பழுக்க காய்ச்ச வேண்டும்.
  • அக்கல்லின் மேல் இலைகளில் மூன்று அல்லது நான்கினை ஒன்றன்மேல் ஒன்றாக வைக்கவும். அந்த இலைகளுக்கு மேல் சூடு பொறுக்கும் அளவுக்கு குதிகாலை அழுத்தி ஊன்றி எடுக்க வேண்டும். இதை பலமுறை செய்துவர விரைவில் வீக்கம் குறைந்து குணம் தெரியும்.
    பெருவியாதியால் ஏற்பட்ட ரணம் முற்றிப் போய் ரணத்தில் அரிப்பும், வலியும் மிகுதிப்பட்டு வேதனையை அடைவோருக்கு எருக்கன் மருந்தாகப் பயன்படுகிறது.
  • இலையையும், வேரையும், பட்டையையும் சமமாக உலர்த்தி இடித்துத் தூள் செய்து கொள்ளவும். அதனைத் தேங்காய் எண்ணெயில் குழைத்து ரணத்தின் மீது தடவி வரவும். மேலும் கொட்டைப் பாக்களவு பசுவின் வெண்ணெயில் தூளைக் கலந்தும் மூன்று வேளைகள் உட்கொள்ளவும். உப்பு சேர்க்காத தயிர், பால் சாதம் போன்ற உணவுகளையே உண்டு வர வேண்டும், விரைவில் குணம் ஆகும்.

காது நோய்க்கு:-

  • காது நோய்க்கு பழுத்த இலையில் இருந்து சாறு எடுத்துக் கொள்ளவும். அதே அளவுக்கு கீழ்க்கண்ட பொருளையும் எடுத்துக் கொள்ளவும். வசம்பு, லவங்கப்பட்டை, பூண்டு, பெருங்காயம் இவற்றை நசுக்கியும், இடித்தும் தூள் செய்து கொள்ளவும்.
  • தூளினை சாற்றுடன் கலந்து மேலும் சம அளவு நல்லெண்ணெயையும் சேர்த்துக் கொள்ளவும். அனைத்தையும் சட்டியில் இட்டு அடுப்பில் காய்ச்சவும்.
  • சாறு சுண்டி பதமாகும் தருணத்தில் இறக்கி வடிகட்டி, ஆறவைத்து கண்ணாடிக் குடுவையில் பத்திரப் படுத்தவும்.
  • காதில் சீழ் வருதல், ரத்தம் வருதல், கடுமையான வலி போன்ற நோய்கள் ஏற்படும் போது மேற்படி மருந்தை நான்கு துளிகள் காதில் ஊற்றி பஞ்சை வைத்து அடைக்கவும். அனைத்து விதமான காது நோய்களும் இதனால் குணமாகும்.
Share This Article
Exit mobile version